கோவையில் முன்னாள் அமைச்சர் சி. சுப்பிரமணியம் திருவுருவச்சிலைக்கு மலர் தூவி மரியாதை...!

published 2 years ago

கோவையில் முன்னாள் அமைச்சர் சி. சுப்பிரமணியம் திருவுருவச்சிலைக்கு மலர் தூவி மரியாதை...!

கோவை: கோவையைச் சேர்ந்தவர் சி. சுப்பிரமணியம். வழக்கறிஞரான இவர் காமராஜர் ஆட்சிக்காலத்தில் கல்வி அமைச்சராகவும் நிதி அமைச்சராகவும் இருந்து பணியாற்றியவர். பசுமைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படும் சி. சுப்பிரமணியம் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

பொள்ளாச்சியை அடுத்த செங்கோட்டுப்பாளையம் பகுதியில் பிறந்த இவர் பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்திற்கு வித்திட்டவர்களில் ஒருவராக உள்ளார். தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்த சி. சுப்பிரமணியம் கடந்த 2000-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உயிரிழந்தார்.

இதனிடையே அவரது நினைவு நாளான இன்று கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியிலுள்ள சி. சுப்பிரமணியத்தின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து, அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத்தலைவர் எம். என். கந்தசாமி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஐ. என். டி. யு. சி பொதுச்செயலாளர் கோவை செல்வன், மாமன்ற உறுப்பினர்கள் சரவணக்குமார், இளைஞர் காங்கிரஸ் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஹரிஹரசுதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நம்ம ஊரு கனெக்‌ஷன்

உங்களால் கண்டுபிடிக்க முடிந்ததா? இந்த கனெக்‌ஷனுக்கான விடை அடுத்த செய்திக்குள் பதிவிடப்படும்...  

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe