கோவை அருகே எலிக் காய்ச்சலுக்கு கர்ப்பிணிப் பெண் பரிதாப பலி..!

published 2 years ago

கோவை அருகே எலிக் காய்ச்சலுக்கு கர்ப்பிணிப் பெண் பரிதாப பலி..!

கோவை: பொள்ளாச்சி அருகேயுள்ள பணிக்கம்பட்டியைச் சேர்ந்தவர் ரொசாரியோ (வயது 24), கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி வனிதா (22). இருவரும் காதலித்து திருமணம் செய்து தனியாக வசித்து வந்தனர்.

வனிதா 5 மாதம் கர்ப்பமாக இருந்தார். கடந்த 24-ஆம் தேதி தீபாவளி பண்டிகையைக் கொண்டாட அன்னூரிலுள்ள ஒரு உறவினர் வீட்டிற்கு வனிதாவும், அவரது கணவரும் சென்றனர். பின்னர் பண்டிகையைக் கொண்டாடிவிட்டு ஊருக்கு வந்த வனிதாவிற்கு திடீரென காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

காய்ச்சல் குணமாகாமல் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் கோவை அரசு மருத்துவமனையில் வனிதா அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு எலிக் காய்ச்சல் இருப்பதை கண்டறிந்தனர். தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் வனிதா பலியானார்.

இதையடுத்து சுகாதாரத் துறையினர் உஷார் படுத்தப்பட்டனர். வனிதா வசித்த பணிக்கம்பட்டி கிராமம் முழுவதும் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது. புரவிபாளையம் அரசு ஆரம்பச் சுகாதார நிலையம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாமும் அமைக்கப்பட்டது. அங்கு யாருக்காவது காய்ச்சல் பாதிப்பு உள்ளதா எனப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

காய்ச்சல் உள்ளவர்களுக்குச் சளி மற்றும் ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தண்ணீரின் தூய்மைத் தன்மை அறியக் குடிநீரும் ஆய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டது. வனிதா கேரளா உள்படப் பல இடங்களுக்குச் சென்று வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் அங்கிருந்து எலிக் காய்ச்சல் பரவி இருக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளது. இது பற்றியும் சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்து வருகிறார்கள்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe