மது கலந்த கேக் மிக்ஸிங் ; டார்சா ரிசார்ட்டில் கோலாகலம்

published 2 years ago

மது கலந்த கேக் மிக்ஸிங் ; டார்சா ரிசார்ட்டில் கோலாகலம்

கோவை: கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைக்காக  தனியார் டார்சா ரிசார்ட்டில் கேக் மிக்ஸிங் நிகழ்ச்சி நடைபெற்றது. ரிசார்ட்டின் நிர்வாக இயக்குனர் ராஜேந்திர பிரசாத் ப்ரீத்தி பிரசாத் கேக் கலவை நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்

பாரம்பரிய முறையில் கேக் தயாரிப்பதற்காக தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில், சுமார் 50 கிலோ எடை கொண்ட உலர் பழ வகைகள், பாதாம், முந்திரி உள்ளிட்ட பருப்பு வகைகள் பழ ரசம் மற்றும் உயர்ரக மதுவில் ஊற வைக்கப்பட்டது.

சுமார் ஒரு மாத கால அளவில் ஊற வைக்கப்படும் இவை, கிறிஸ்துமஸின் போது கேக் செய்யப் பயன்படுத்தப்படும். இந்த கலவையில் இருந்து சுமார் 75 கிலோ முதல் 100 கிலோ வரை பிளம் கேக் தயாரிக்க முடியும் என்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பொது மேலாளர்  சத்யா மற்றும் செஃப்  . ராஜேஷ் தெரிவித்துள்ளனர். இந்த ரிசார்ட் பன்னிமடையில் அமைந்துள்ளது.

இதில் 36 தனித்தனி ஆடம்பர வில்லாகள், நான்கு விருந்து அரங்குகள் , ஒரு திறந்த புல்வெளி அரங்கு , குழந்தை மற்றும் பெரியவர்களுக்கான தனி தனி  நீச்சல் குளங்கள் மற்றும் ஒரு குடிசை அரங்கு உள்ளது. மேலும் குழந்தைகளுக்கான விளையாட்டு அரங்கு, உடற்பயிற்சி கூடம், பொழுது போக்கு அறைகள் உள்ளன.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe