கோவையில் உறவினருடன் செல்பி எடுத்த மனைவிக்கு கத்தி குத்து - கணவர் கைது…!

published 2 years ago

கோவையில் உறவினருடன் செல்பி எடுத்த மனைவிக்கு கத்தி குத்து - கணவர் கைது…!

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்: https://chat.whatsapp.com/KsPYwSVgSwPDblO1iteFxE  

கோவை: கோவையில் உறவினருடன் செல்பி எடுத்த மனைவியைக் கத்தியால் குத்திய கணவனை போலீசார் கைது செய்தனர்.

கோவை இடையர்பாளையம் டிவி எஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் எட்வர்ட் ஜான் (49). 
இவரது மனைவி கிரேஸ் பியூலா (33). திருமணமாகி ஒரு மகள் உள்ளார். எட்வர்ட் ஜான் மதுவிற்கு அடிமையாகி பணிக்குச் செல்லாமல் வீட்டிலிருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 6-ஆம் தேதி கிரேஸ் பியூலாவின் சகோதரியின் திருமணம் கோவை சிஎஸ்ஐ தேவாலயத்தில் நடைபெற்றது. அப்போது கிரேஸ் பியூலா அவரது உறவினர் ஒருவருடன் செல்பி எடுத்துள்ளார். 
இதைப் பார்த்த அவரது கணவர் எட்வர்ட், ஏன் அவருடன் புகைப்படம் எடுத்தாய் எனக் கேட்டு தகராறில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இதை அடுத்து மீண்டும் மறுநாள் கிரேஸ் பியூலா தனது மகளுடன் இடையர்பாளையத்திற்கு தங்கை வீட்டிற்குச் சென்று விட்டு மீண்டும் இரவு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது குடிபோதையிலிருந்த எட்வர்ட் ஜான் செல்பி எடுத்தது குறித்து மனைவியிடம் கேட்டு அவரை கடுமையாகத் தாக்கியுள்ளார்.
மேலும் அங்கிருந்த கத்தியை எடுத்து கழுத்திலும் வெட்டியுள்ளார். இதைக் கண்ட அவரது மகள் பயத்தில் மயங்கி விழுந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து கிரேஸ் பியூலா தனது தாய் தமிழ்ச்செல்விக்கு செல்போன் மூலம் அழைத்து தகவலைக் கூறியுள்ளார். தகவலறிந்து அங்கு வந்த அவர் இருவரையும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். 
இது குறித்து தமிழ்ச்செல்வி துடியலூர் போலீசில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் எட்வர்ட் ஜானை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe