எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் சார்பில் ஆரோக்கியமான வாழ்க்கை தொடர்பாக விழிப்புணர்வு ஓட்டம்

published 2 years ago

எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் சார்பில் ஆரோக்கியமான வாழ்க்கை தொடர்பாக விழிப்புணர்வு ஓட்டம்

கோவை: எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் சார்பில் உலகளவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் அவசியத்தைப் பற்றிய விழிப்புணர்வு ஓட்டம் கோவையில் நடைபெற உள்ளது.

உலகின் முன்னணி ஏர்-கம்பரசர்கள் உற்பத்தியாளர்களில் ஒன்றான, எல்ஜி (Elgi) எக்யூப்மென்ட்ஸ் அதன் வருடாந்திர 'வாட்ஸ்யுவர்ஃபினிஷ்லைன்' சவாலின் நான்காவது பதிப்பை முடித்தது. 
இதனிடையே உலகெங்கிலும் உள்ள 1,874 பணியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உடல் தகுதி மற்றும் மன நலம் பற்றிய விழிப்புணர்வை பரப்பவும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் அவசியத்தை வலியுறுத்தவும் வேண்டும் என்னும் பொதுவான நோக்கத்திற்காக ஒன்றிணைந்தனர்.

இந்த ஆண்டு, 27 நாடுகளில் இருந்து 1874 பங்கேற்பாளர்கள், 124 அணிகளாகப் பிரிக்கப்பட்டு, 137,838 கிமீ (85648 மைல்கள்) ஓட்டம், நடைபயிற்சி அல்லது ஜாக்கிங் செய்தனர். தியானம், சைக்கிள் ஓட்டுதல் மற்றும் ஸ்குவாட்கள் போன்ற பல தினசரி மன மற்றும் உடல் தகுதி சவால்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டன.

கோயம்புத்தூர் மாரத்தான் 2022, டிசம்பர் 11 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ளது, இதில் 1700 க்கும் மேற்பட்ட எல்ஜி ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பங்கேற்க உள்ளனர்.

இது கோயம்புத்தூர் மாரத்தான் போட்டியின் 10வது பதிப்பாகும் மற்றும் எல்ஜி 2013 முதல் இதன் ஸ்பான்சராக இருந்து வருகிறது. மாரத்தான் ஓட்டத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் அனைத்தும் கோயம்புத்தூர் புற்றுநோய் அறக்கட்டளைக்கு புற்றுநோய் விழிப்புணர்வை மக்களிடையே பரப்பும் முயற்சிக்காக உதவிடும் வகையில் வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தகது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe