ஸ்கிராப் எடுக்கிறீர்களா.. கவனம் இல்லை என்றால் இரண்டு வரும் ஜெயில்.. எச்சரித்த கோவை காவல்துறை

published 2 years ago

ஸ்கிராப் எடுக்கிறீர்களா.. கவனம் இல்லை என்றால் இரண்டு வரும் ஜெயில்.. எச்சரித்த கோவை காவல்துறை

கோவை: ஸ்கிராப் தொழிலில் ஈடுபடுபவர்கள் சந்தேகத்துக்கிடமான வாகனங்கள் என்று தெரிந்தால் உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்று கோவை மாநகர காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பழைய வாகன உதிரி பாகங்கள் மற்றும் இரும்பு சாமான்கள் விற்பனை செய்பவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கோவை மாநகர காவல் துணை ஆணையர் அசோக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட உதிரி பாகங்கள் விற்பனையாளர்கள், வியாபாரிகள் மற்றும் இருசக்கர நான்கு சக்கர வாகன ஒர்க் ஷாப் முதலாளிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் வியாபாரிகளுக்கு பழைய வாகனங்களை உடைத்து உதிரி பாகங்களை விற்பனை செய்ய முறையான அனுமதி மற்றும் உரிமம் பெற வேண்டும் என தெரிவித்தனர். 

மேலும் தாங்கள் பெறும் உரிமத்தை மூன்று வருடங்களுக்கு ஒரு முறையு புதுப்பிக்க வேண்டும், மற்றும் பழைய வாகனங்களை உடைத்து உதிரி பாகங்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் தங்கள் கடைகளுக்கு வரும் வாகனங்கள் மற்றும் உடைக்கப்பட்ட வாகனங்களை பதிவு செய்து பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும் என ஆலோசனை வழங்கினர்.

அதேபோல கடைக்கு கொண்டுவரப்படும் வாகனங்கள் திருட்டு வாகனங்களாக இருப்பின் அல்லது சந்தேகத்துக்கு இடம் அளிக்கக் கூடிய வாகனங்களாக இருந்தால் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் காவல்துறையினர் கேட்டுக் கொண்டனர். 

மேலும் உரிமம் வைத்திருப்பவர் இரண்டாவது முறையாக நிபந்தனைகளை மீறும்பட்சத்தில் தவறு செய்த நபருக்கு இரண்டு வருடம் சிறை தண்டனை மற்றும் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.இதற்கு கூட்டத்திற்கு வந்த விற்பனையாளர்கள் காவல்துறையின் சட்ட திட்ட விதிகளுக்கு உட்பட்டு நடப்பதாக உறுதியளித்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe