மின்னணு உயிர் வாழ் சான்றிதழைச் செயலி மூலம் சமர்ப்பிக்கலாம்: வருங்கால வைப்பு நிதி உதவி ஆணையர் தகவல்

published 2 years ago

மின்னணு உயிர் வாழ் சான்றிதழைச் செயலி மூலம் சமர்ப்பிக்கலாம்: வருங்கால வைப்பு நிதி உதவி ஆணையர் தகவல்

கோவை: கோவை மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம், வருங்கால வைப்பு நிதி உதவி ஆணையர் (ஓய்வூதியம்) ஆல்பர்ட் ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 
"ஓய்வூதியதாரர்கள் தங்களது கைரேகை அல்லது கருவிழி அடிப்படையில் மின்னணு உயிர் வாழ் சான்றிதழைச் சமர்ப்பித்து வந்தனர். ஆனால் சிலருக்குக் கைரேகை அல்லது கருவிழி அடிப்படையில் உயிர் வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்க முடிவது இல்லை.

இதனை அடுத்து ஓய்வூதியதாரர்கள் தங்களது மின்னணு உயிர் வாழ் சான்றிதழைச் சமர்ப்பிப்பதற்காக மற்றொரு வழிமுறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஒன்றிய அரசு ஓய்வூதியம் மற்றும் பென்ஷனர் நல்வாழ்வுத் துறை சார்பாக AadhaarFaceRd App என்கிற செயலியை உருவாக்கி உள்ளது.

ஓய்வூதியதாரர்கள் இச்செயலியை தங்களது ஆண்ட்ராய்டு போன் மூலமாகப் பதிவிறக்கம் செய்து அதன்பின் Jeevan Pramaan Face Application என்ற மென்பொருளையும் பதிவிறக்கம் செய்து உரிய காலத்தில் உயிர் வாழ் சான்றிதழைப் புதுப்பிக்கலாம்." இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe