ஊட்டியில் குறும்பட விழா தொடக்கம்: ஆட்சியர் அம்ரித் பங்கேற்பு

published 2 years ago

ஊட்டியில் குறும்பட விழா தொடக்கம்: ஆட்சியர் அம்ரித் பங்கேற்பு

கோவை: ஊட்டி அசெம்பிளி திரையரங்கத்தில் குறும்பட விழா தொடங்கியது. இதற்கு ஆட்சியர் அம்ரித் தலைமை தாங்கினார். வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் குத்து விளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தார்.

பின்னர் போதை பழக்கத்திலிருந்து மாணவர் விடுபடும் கதை கொண்ட குறும்படத்தை அமைச்சரும், ஆட்சியரும் பார்த்தனர். குறும்பட விழா 3 நாட்கள் நடைபெறும். தங்களது திறமைகளை வெளிப்படுத்துவதற்குக் குறும்படம் ஒரு வாய்ப்பாக கருதும் பல வளர்ந்து வரும் இயக்குனர்கள் தங்கள் தயாரிப்புகளை இங்கே வெளியிட உள்ளனர்.

ஊட்டியின் வாழ்வு முறையை பறைசாற்றும்  வகையில் குறும்பட தயாரிப்பாளர்கள் மூலம் படுகர் இன மொழியில் குறும்படம் தயாரிக்கப்பட்டு இங்கே வெளியிடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

விழாவில் அசெம்பிளி ரூம்ஸ் செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe