பாபர் மசூதி இடிப்பு தினம் கோவையில் 2500 போலீசார் பாதுகாப்பு

published 2 years ago

பாபர் மசூதி இடிப்பு தினம் கோவையில் 2500 போலீசார் பாதுகாப்பு

கோவை: பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் 2500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று கடைபிடிக்கப்படுவதையொட்டி அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக வழக்கத்தை விட தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

குறிப்பாக கோவையில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநகரில் 1500 ஆயிரம் போலீசாரும், புறநகரில் 1000 போலீசாரும் என மாவட்டம் முழுவதும் 2500 போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளான கிராஸ்கட் ரோடு, காந்திபுரம், டவுன்ஹால் மற்றும் கடைவீதி பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வழியாக வரும் வாகனங்களையும் சோதனைக்கு உட்படுத்துகின்றனர்.

இதேபோன்று காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம், திருவள்ளுவர் பேருந்து நிலையம், புறநகர் பேருந்து நிலையம், சிங்காநல்லூர் பேருந்து நிலையம், உக்கடம் பேருந்து நிலையங்களிலும் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

மேலும் கோனியம்மன் கோவில், தண்டு மாரியம்மன் கோவில் உள்பட அனைத்து கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் முன்பும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 

இது தவிர கோவை ரயில் நிலையத்திலும், விமான நிலையத்திலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் முக்கிய இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர் கருவிகள் மூலம் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe