கோவை மகளீரே.. அவ்வையார் விருது பெற விருப்பமா.? - அழைப்புவிடுத்துள்ளார் ஆட்சியர்

published 2 years ago

கோவை மகளீரே.. அவ்வையார் விருது பெற விருப்பமா.? - அழைப்புவிடுத்துள்ளார் ஆட்சியர்

பெண்களின் முன்னேற்றத் துக்கு சிறந்த சேவை புரிந்தோர் 2023ஆம் ஆண் டுக்கான அவ்வையார் விருது பெற விண்ணப் பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

பெண்களின் முன்னேற்றத்துக்கு சிறந்த சேவை புரிந்தோருக்கு 2023ஆம் ஆண்டு மகளிர் தினவிழா அன்று அவ்வையார் விருது வழங்கிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பதாரர், தமிழ்நாட்டை பிறப்பிட மாக கொண்டவராகவும், 18 வயதுக்கு மேற்பட் டவராகவும் இருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூக நலனைச் சார்ந்த நடவ டிக்கைகள், பெண் குலத்துக்கு பெருமை சேர்க் கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாகப் பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றுபவராக இருத்தல் வேண்டும்.

விருதுக்கான விண்ணப்ப விவரங்கள், தமிழக அரசின் விருதுகள் இணையமான https://awards.tn.gov.in இல் பதிவு செய்யப் பட்டுள்ளது.

அரசு அலுவலர்கள் இந்த விருதுக்கு தகுதியானவர் இல்லை. விண்ணப்பிக்கும்போது, பொருளடக்கம் மற்றும் பக்க எண், தேசிய மற்றும் உலகளாவிய விருதுகள் பெற்றிருப்பின் அதன் விவரம், சேவை பற்றிய செயல்முறை விளக்கம், சேவையைப் பாராட்டி பத்திரிகை செய்திகள் தொகுப்பு, தொண்டு நிறுவனத்தின் பதிவு, உரிமம், ஆண்டறிக்கை, அருகில் உள்ள காவல் நிலையத்தில் இருந்து பெறப்பட்ட குற்றவியல் நடவடிக்கைகள் ஏதுமில்லை என்பதற்கான சான்று ஆகியவற்றுடன் தகுதி வாய்ந்த பெண் கள் மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம், கோவை என்ற முகவரிக்கு, அனைத்து சான்று விவரங்களுடன் டிசம்பர் 9ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்களை அனுப்பிவைக்க வேண்டும்.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe