கோவை மக்களே..கலப்படமே இல்லாத காளான் சாப்பிடனுமா?

published 2 years ago

கோவை மக்களே..கலப்படமே இல்லாத காளான் சாப்பிடனுமா?

கோவையில் கலப்படமே இல்லதா தட்டுக்கடை காளான் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சாலையோரங்களில் கிடைக்கும் தட்டுக்கடை உணவுகள் கோவை மிகவும் பிரபலம். இங்கு ஏராளமான தொழிலாளர்கள் உள்ளதால், குறைந்த விலையில் உணவுகளுக்காக தகட்டுக்கடையை நாடி வருகின்றனர்.

இப்படிப்பட்ட தட்டுக்கடைகளில் உணவு வகைகள் மட்டுமல்லாது துரித உணவுகளும் கிடைக்கின்றன. நூடுல்ஸ், காளான்,  பேல்பூரி, மசால் பூரி, ப்ரைடு ரைஸ், காளிபிளவர் சில்லி, சில்லி சிக்கன் என்று வகை வகையான உணவுகள் கிடைக்கின்றன.

இப்படிப்பட்ட துரித உணவுகள் தரமானதாக கிடைக்கிறதா? என்று கேட்டால் அது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. உதாரணத்திற்கு காளான் மசாலா நாம் கேட்கும் போது அதில் குறைந்தபட்சமே காளான் இருக்கும், காளிபிளவர் மற்றும் கான்பிளவர் மாவை சேர்த்து கலப்படமான காளான் மசாலாவை பல தட்டுக்கடைகள் விற்பனை செய்து வருகின்றன.

இதனிடையே வ.உ.சி பூங்கா மைதான சாலையில் 'சாதனா' என்ற பெயரில் செயல்பட்டு வரும் தட்டுக்கடையில் கலப்படமே இல்லாத ஒரிஜினல் காளான் பரிமாறப்பட்டு வருகிறது.

கலப்பட காளான் மசாலா 20 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் நிலையில், இந்த சாதனா தட்டுக்கடையில் 30 ரூபாய்க்கு சுவையான, தரமான காளான் மசாலா விற்பனை செய்யப்படுகிறது.

வ.உ.சி பூங்கா மைதானம் சென்றால் மறக்காமல் இந்த ஒரிஜினல் காளான் மசாலவை சுவைத்துப்பாருங்கள்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe