வீசிங் பிரச்சனையால் அவதியுற்று வந்த கோவை சிறுவன் உலக சாதனை

published 2 years ago

வீசிங் பிரச்சனையால் அவதியுற்று வந்த கோவை சிறுவன் உலக சாதனை

கோவை: கோவை விளாங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் மாணவன் தியொடரஸ் ஹெவன் (11). இவர் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டு வருகிறார். இவர் குழந்தை பருவத்தில் இருந்தே வீசிங் நோயினால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் இவர் தொடர்ந்து 7 மணிநேரம் 7 வினாடிகள்  இடைவிடாமல் இரண்டு கைகளிலும் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்துள்ளார்.

இது குறித்து தியொடரஸ் ஹெவன் கூறியதாவது: ' எனக்கு குழந்தை பருவத்தில் இருந்தே வீசிங் இருந்து வருகிறது. இதனால் மற்ற குழந்தைகளைப் போல ஓடி விளையாட முடியாமல் தனிமையிலேயே இருந்து வந்தேன். சிறிது தூரம் கூட என்னால் ஓட முடியாது. இப்படி ஓடினாலும் கூட பயங்கரமாக மூச்சு இரைச்சல் ஏற்படும்.l

பெற்றோர்கள் என்னை மருத்துவர்களிடம் கூட்டிச்சென்று பல்வேறு முறையான சிகிச்சை அளித்தனர்.  ஆனால் எந்தவித உபயோகமும் இல்லை. 

 இதையடுத்து எனது பெற்றோர்கள் என்னை முல்லை தற்காப்பு கலை கழகத்தில் என்னை சேர்த்து விட்டனர். அங்கு எனது பயிற்சியாளர் பிரகாஷ்ராஜ் எனக்கு சிலம்பம் பயிற்சியை அளித்தார். ஆரம்ப காலத்தில் என்னால் ஒரு சில வினாடிகள் மட்டுமே சிலம்பம் சுற்ற முடிந்தது. ஆனால் என்னை மேலும் சிலம்பம் சுற்ற சொல்லி எனது பயிற்சியாளர் என்னை ஊக்கப்படுத்துவார். நாட்கள் செல்ல செல்ல என் பயிற்சியும் அதிகமானது. இதனால் என்னுடைய ஸ்டாமினா அதிகரித்தது. ஆறு மாதங்களில் மூச்சு இரைச்சல் கம்மியாகி மற்றவர்களை போல சிலம்பம் சுற்ற ஆரம்பித்தேன். அப்பொழுது எனது பயிற்சியாளர் இந்த சிலம்பத்தில் உன்னால் சாதிக்க முடியும் என்று கூறி எனக்கு இந்த 7 மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றுவதற்கான பயிற்சியை எனக்கு அளித்தார். இதன் காரணமாக தற்போது தொடர்ந்து ஏழு மணி நேரம் 7 நிமிடங்கள் இரண்டு கைகளிலும் சிலம்பம் சுற்றி உலக சாதனை செய்துள்ளேன். இந்த சாதனையை இந்தியன் புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ், அமெரிக்கன் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஐரோப்பியன் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் ஆகிய மூன்று புத்தகங்கள் அங்கீகரித்துள்ளது. எந்த ஒரு தடங்கலும் நிரந்தரம் இல்லை. நம்முடைய முயற்சியும் திறமையும் இருந்தால் எப்பேர்ப்பட்ட தடங்களையும் மீறி பல சாதனைகள் செய்ய முடியும்' இவ்வாறு அவர் கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe