கோவையில் பறவை காய்ச்சல் இல்லை.. மாவட்ட ஆட்சியர் திட்டவட்டம்

published 2 years ago

கோவையில் பறவை காய்ச்சல் இல்லை.. மாவட்ட ஆட்சியர் திட்டவட்டம்

கோவை: கோவையில் பறவை காய்ச்சல் இல்லை என்று மாவட்ட ஆட்சியர் சமீரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு மீண்டும் உருவாகி உள்ளது. கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ஆர்ப்புக்கரை, தலயாழம் பகுதிகளில் உள்ள பண்ணைகளில் வாத்து, பறவைகள் திடீரென செத்து மடிந்துள்ளன.

இதனையடுத்து சுகாதாரத்துறை ஆய்வில் பறவை காய்ச்சல் இருப்பது உறுதியானது. பறவை காய்ச்சல் பாதிப்பின் எதிரொலியாக தமிழகத்தில் கேரள மாநிலத்தையொட்டி உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கோழி, வாத்து பண்ணைகள் போன்றவற்றில் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கேரள மாநிலத்தையொட்டி உள்ள கோவை மாவட்டத்தில் வாளையார், வேலந்தாவளம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பகுதிகள் வழியாக கேரளாவுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சோதனை சாவடிகளில் பறவை காய்ச்சல் தொடர்பாக கண்காணிப்புகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. 

கேரளாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்படுகின்றன. இதனால் கோவையில் இருந்து கோழிகள் வெளிமாநிலங்களுக்கு அனுப்புவது தேக்கமடைந்துள்ளது. இதனால் வியாபாரிகள் இழப்பை சந்தித்து வருகின்றனர். 
 


கோவையில் சில்க் மார்க் தரத்துடன் கிடைக்கும் பட்டு சேலைகள்.. எங்கே..? என்னென்ன? முழு விவரங்களுக்கு இந்த வீடியோவை காணலாம்…  https://youtu.be/YoNfhv5ckJE 
 

கோவையில் பறவை காய்ச்சல் இல்லை என்று மாவட்ட ஆட்சியர் சமீரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மாவட்டத்தின் அனைத்து எல்லை சோதனை சாவடிகளும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. கோவையில் உள்ள கோழிப் பண்ணைகள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தின் மேற்பார்வையில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. 

அனைத்து சுகாதாரத்துறை ஊழியர்களுக்கும் தகுந்த ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் தற்போது பறவை காய்ச்சல் பாதிப்பு எதுவும் இல்லை. மக்கள் அச்சம் அடைய வேண்டாம்.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe