2023-ஆம் ஆண்டின் விரத தினங்கள் இதோ...!

published 2 years ago

2023-ஆம் ஆண்டின் விரத தினங்கள் இதோ...!

விரதம் என்பது இந்து முறைப்படி ஒரு ஆன்மீக மற்றும் ஒழுக்கத்துக்கான செயலாகக் கருதப்படுகிறது. விரதம் இருப்பது தெய்வீக அருளைப் பெறும் வழியாக நம்பப்படுகிறது. கடவுள் உணர்வை அதிகரித்து நம்மை கடவுளுக்கு நெருக்கமாக உணரச்செய்கிறது. நாம் நினைத்ததை நிறைவேற்றிய கடவுளுக்கு நன்றி சொல்லும் விதமாகவம் விரதம் அனுசரிக்கப்படுகிறது. வேதங்களின்படி, உண்ணாமல் விரதம் இருப்பது கடவுளுடன் ஒரு இணக்கத்தை உருவாக்கி, உடல் மற்றும் மனதிற்கு இடையே சீரான நிலையை ஏற்படுத்த இன்றியமையாததாக கருதப்படுகிறது.

பண்டிகைகள் அல்லது புனித நாட்களைக் கொண்டாடவும், நம் வாழ்க்கை சுழற்சியில் அடங்கும் திருமணம், பேறு காலம், இறப்பு போன்ற சடங்குகளில் பங்கேற்கவும் விரதம் கடைபிடிக்கப்படுகிறது. மனதையும் உடலையும் தூய்மைப்படுத்தி மோசமான சந்தர்ப்பங்களில் எதிர்மறை சக்திகளை எதிர்க்கவும் உதவுகிறது. முந்தைய காலத்தில் தவறு செய்தோருக்கான தண்டனையாக விரதம் விதிக்கப்பட்டு, அதன் மூலம் அவர்களுக்கு நற்பண்புகள் போதிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

விரத முறை என்பது இந்து தர்மத்திற்குள் வரையறுக்கப்படவில்லை என்றாலும் விரதங்களில் உண்ணாமல் இருப்பது, பேசாமல் இருப்பது, பிற இன்பச்செயல்களில் ஈடுபடாமல் இருப்பது போன்ற வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. தனிப்பட்ட நம்பிக்கைகள் அல்லது நடைமுறையைப் பொறுத்து அமாவாசை, பௌர்ணமி போன்ற குறிப்பிட்ட நாட்களில் உணவு அல்லது தண்ணீரை உட்கொள்ளாமல் இருப்பது, பகலில் ஒரு குறிப்பிட்ட சைவ உணவு மட்டும் உட்கொள்வது, குறிப்பிட்ட சில நாட்களுக்கு குறிப்பிட்ட உணவு வகைகளை மட்டுமே உண்ணுதல் அல்லது குறிப்பிட்ட சில நாட்களுக்கு குறிப்பிட்ட உணவு வகைகளை உண்ணாமல் இருத்தல் போன்ற முறைகளைப் பின்பற்றுவது வழக்கம்.

வாரத்தின் சில நாட்கள் ஒரு குறிப்பிட்ட தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டு விரதம் இருப்பதும் இந்துக்களின் நம்பிக்கை. அந்த குறிப்பிட்ட தெய்வத்தை போற்றி விரதம் அனுசரித்து வழிபடுவர். உதாரணமாக, சிவ பக்தர்கள் திங்கட்கிழமைகளிலும், விஷ்ணுவின் பக்தர்கள் வியாழக்கிழமைகளிலும் விரதம் இருப்பர். பல இந்துக்கள் மாதத்தின் சில நாட்களில் விரதம் இருப்பார்கள். அமாவாசை, ஏகாதசி, பௌர்ணமி மற்றும் சஷ்டி போன்ற தினங்களில் முன்னோர்கள் மற்றும் கடவுளை வழிபடுவர். அவ்வாறு 2023-ஆம் ஆண்டு விரதம் இருப்போருக்கான முக்கிய தேதிகள் இதோ...

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe