மருந்து வணிகர் சங்கத்தினர் கோவை காவல் ஆணையரிடம் புகார்

published 2 years ago

மருந்து  வணிகர் சங்கத்தினர் கோவை காவல் ஆணையரிடம் புகார்

கோவை : தேர்தலில் தோல்வியடைந்த காரணத்தால்  தவறான செய்திகளை பரப்பி வரும் நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மருந்து வணிகர் சங்கத்தினர் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

கோவை மாவட்ட மருந்து வணிகர் சங்க நிர்வாகிகள் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில் சுரேஷ்குமார் என்பவர் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து தங்கள் சங்கம் பற்றியும் சங்க நிர்வாகிகள் பற்றியும் அவதூறு பதிவுகளை பதிவிட்டு வருவதாக குறிப்பிட்டிருந்தனர். இதுகுறித்து பலமுறை நேரிலும் காவல் நிலையம் வாயிலாகவும் அறிவுரை வழங்கியும் அவர் கேட்க மறுப்பதாகவும் எனவே அவர் மீது தக்க நடவடிக்கை எடுத்து தங்களது பாதுகாப்பையும் உறுதி செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

இது குறித்து பேட்டியளித்த கோவை மாவட்ட மருந்து வணிகளர் சங்க பொருளாளர் ராமச்சந்திரன், "எங்களது சங்கத்தில் கடந்து ஒரு வருடத்திற்கு முன்பு தேர்தல் நடைபெற்றது. அதில் எங்கள் அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் எனக்கு எதிராக பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட சுரேஷ்பாபு என்பவர் தேர்தலில் தோல்வி அடைந்த காரணத்தினால் சங்கத்தின் மீதும் சங்க நிர்வாகிகள் குறித்தும் அவதூறு செய்திகளை பரப்பி வருகிறார். இதனால் எங்களுக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது. இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம்." என்றார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe