கோவையை சேர்ந்த பெண் தமிழக அழகியாக தேர்வு

published 2 years ago

கோவையை சேர்ந்த பெண் தமிழக அழகியாக தேர்வு

கோவை: திருமணமான பெண்களுக்கு இடையே நடைபெற்ற அழகிப்போட்டியில் கோவையை சேர்ந்த ஷாலு ராஜ் என்பவர் தமிழக அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

திருமணமான பெண்களுக்கான மிசஸ் சவுத் இந்தியா அழகி போட்டி கொச்சியில் நடந்தது. கொச்சியில் பெகாசஸ் குளோபல் நிறுவனத்தால் திருமணமான பெண்களுக்கான மிசஸ் தென்னிந்திய அழகி போட்டி நடைபெற்றது. தென்னிந்திய மாநிலங்களில் இருந்து திருமணமான பல்வேறு பெண்கள் போட்டியில் கலந்து கொண்டனர். அவர்களில் 14 போட்டியாளர்கள் இறுதிச் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

கோவை சரவணம்பட்டி அருகே உள்ள விசயபுரத்தை சேர்ந்த ஷாலு ராஜ் (வயது 30) தேர்வு செய்யப்பட்டார். மிசஸ் சவுத் இந்தியா போட்டியில் ஷாலு ராஜ் 2வது இடத்தையும், மிசஸ் தமிழ்நாடு போட்டியில் முதலிடம் பெற்று மிசஸ் தமிழ்நாடு பட்டத்தையும் வென்றார். அவரது பன்முக ஆளுமைகளுக்காக திருமதி. நல்ல உடல் அமைப்பு, திருமதி. திறமைசாலி, திருமதி. நம்பிக்கையாளர் மற்றும் திருமதி. ஆப்டிமிஸ்ட் ஆகிய விருதுகளையும் பெற்றார். இதையடுத்து அவருக்கு தங்க கிரீடம் சூட்டப்பட்டது.

இதுகுறித்து ஷாலு ராஜ் கூறுகையில், நான் சொந்தமாக காபி ஷாப் நடத்தி வருகிறேன். எனது காபி கடையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களை வேலைக்கு அமர்த்தி அவர்களின் வாழ்க்கைக்கு வழிவகுத்து வருகிறேன். என் கணவர் ராஜ்சிவானந்தம்.

எனக்கு ஆரின் ஆதியா என்ற 4 வயது மகன் இருக்கிறான்.
திருமணமான பெண்கள் வீட்டில் முடங்கி கிடக்காமல் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் மிஸஸ் அழகி போட்டியில் பங்கேற்றேன்.

அதில் வெற்றியும் அடைந்து விட்டேன். எனது குடும்பம் மிகவும் உறுதுணையாக இருந்தது என்றார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe