இரண்டு நாள் பத்திரிகையாளர்களாக மாறிய வேளாண் மாணவர்கள்

published 2 years ago

இரண்டு நாள் பத்திரிகையாளர்களாக மாறிய வேளாண் மாணவர்கள்

கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில், முனைவர் மற்றும் முதுகலை மாணவர்களின் திறன் மேம்பாட்டிற்காக வேளாண் விரிவாக்கம் மற்றும் ஊரக சமூகவியல் துறை சார்பில் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் பத்திரிக்கையாளர் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது.

கோவையின் அடையாளமாக விளங்கும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மாணவர்களின் கல்விக்காகவும், திறன் மேம்பாட்டிற்காகவும், பல்வேறு முன்னெடுப்புகளை செயல்படுத்தி வருகிறது.

இதன் ஒருபகுதியாக, வேளாண் விரிவாக்கம் மற்றும் ஊரக சமூகவியல் துறை சார்பில் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் வேளாண் மாணவர்களுக்கு பத்திரிகை துறை குறித்த பயிற்சி பட்டறை நடைபெற்றது.

இந்த இரண்டு நாள் பயிற்சி பட்டறையில் அச்சு மற்றும் சமூக வலைத்தள பத்திரிக்கை சார்ந்த திறன் மேம்பாடு குறித்து மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

இதில் பல்கலைக்கழகத்தின் வெவ்வேறு துறைகளை சார்ந்த 30 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு  அனுபவமிக்க ஊடகவியலாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் கொண்டு பயிற்சி வழங்கப்பட்டது. விடுமுறை வார இறுதி நாட்களிலும், மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இப்பயிற்சியின் இறுதியில், பங்குப்பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்த பட்டறையை முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்பு முதன்மயர் செந்தில் பயிற்சியை துவங்கி வைத்து பயிற்சி கையேட்டை வெளியிட்டார்.

இதுகுறித்து வேளாண் விரிவாக்கம் மற்றும் ஊரக சமூகவியல் துறை தலைவர் கார்த்திகேயன் கூறுகையில், "இப்பயிற்சியானது தனித்துவத்துடனும் தொலை  நோக்கு பார்வையுடனும் இனிவரும் டிஜிட்டல் யுகத்தில் வேளாண் மாணவர்களின் திறனை மேம்படுத்த உதவும்" என்றார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe