கோவையில் இளம் பெண்ணின் கைப்பையைத் திருடி ஏடிஎம் மூலம் 84 ஆயிரம் திருட்டு: இருவர் கைது

published 2 years ago

கோவையில் இளம் பெண்ணின் கைப்பையைத் திருடி ஏடிஎம் மூலம் 84 ஆயிரம் திருட்டு: இருவர் கைது

கோவை: கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த வெள்ளிங்கிரி என்பவரின் மகள் கலைச்செல்வி. இவர் தனது தாயாருடன் சிங்காநல்லூர் பகுதியிலிருந்து காந்திபுரத்திற்குப் பேருந்து மூலம் வந்து கொண்டிருந்தார். இருவரும் அரசு மகளிர் பாலிடெக்னிக் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆட்டோ மூலம் சென்றனர். 

அங்குச் சிகிச்சைக்காகப் பணம் எடுக்கத் தனது கைப்பையை கலைச்செல்வியின் தாயார் எடுக்க முயன்ற போது பையில் வைத்திருந்த கைப்பை காணாமல் போயிருந்தது தெரியவந்தது. அதே நேரத்தில் அவரது வங்கிக் கணக்கிலிருந்து 84 ஆயிரம் ரூபாய் பணம் ஏ.டி.எம் மூலம் எடுத்ததாக கலைச்செல்வியின் தாயார் செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கலைச்செல்வியும் அவரது தாயாரும் மகளிர் பாலிடெக்னிக் அருகே உள்ள ஏ.டி.எம் மையத்திற்கு விரைந்து வந்தனர் .

அப்போது அங்கு இரண்டு பெண்கள் பணத்துடன் நின்று கொண்டிருந்தது தெரிய வந்தது. உடனே அவர்கள் இருவரையும் கலைச்செல்வியும் அவரது தாயாரும் கையும், களவுமாகப் பொதுமக்கள் உதவியுடன் பிடித்தனர். பின்னர் கலைச்செல்வி அவர்களை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பகவதி என்பவரின் முதல் மனைவி மாரி என்கிற காளியம்மாள் மற்றும் அவரது இரண்டாவது மனைவி சித்ரா என்கிற செல்வி என்பதும் தெரிய வந்தது . தொடர்ந்து காவல்துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் இதேபோல அவர்கள் தொடர்ந்து பிக்பாக்கெட் தொழிலைச் செய்து வந்ததும் தெரிய வந்தது.

பிறகு அவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe