கோவை மாநகரில் காவல்துறையினர் சிறப்பு ஆய்வு: தலைக்கவசம் அணியாத 618 பேர் மீது வழக்கு

published 2 years ago

கோவை மாநகரில் காவல்துறையினர் சிறப்பு ஆய்வு: தலைக்கவசம் அணியாத 618 பேர் மீது வழக்கு

கோவை: கோவை மாநகர் பகுதியில் நேற்று காவல்துறையினர் நடத்திய சிறப்பு வாகனத் தணிக்கையில் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டிய 618 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கோவை மாநகரில் விபத்துக்களைத் தடுக்கும் பொருட்டு, காவல் ஆணையர் உத்தரவின் பேரில் நேற்று காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். 
காளப்பட்டி ரோடு, பீளமேடு, பிபிஎல் ஜங்ஷன், லட்சுமி மில் ஜங்ஷன், சரவணம்பட்டி சோதனைச்சாவடி, துடியலூர் ரோடு, ரத்தினம் காலேஜ், உக்கடம் லாரிபேட்டை உள்ளிட்ட 10 இடங்களில் சிறப்பு வாகன சோதனை நடைபெற்றது.

இதில் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டிய 928 இருசக்கர வாகன ஓட்டிகளில் 618 பேர் மீது மோட்டார் வாகன சட்டப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 310 நபர்கள் எச்சரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.

1899 இருசக்கர வாகன ஓட்டிகளும், அந்தந்த சிறப்பு வாகனத் தணிக்கை முகாமில், தன்னார்வ அமைப்புகள் மூலம் விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்பட்டு, அதன் தொடர்ச்சியாக, சிறுவர்கள் போக்குவரத்து பூங்காவில் உள்ள பயிற்சி மையத்தின் மூலமும், விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்பட்டது.

மேலும், தலைக்கவசம் அணிந்து பயணம் செய்த 971 இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டு, தொடர்ந்து வாகனங்களை இயக்கும்போது பாதுகாப்பு வழிமுறைகளை முழுமையாகப் பின்பற்றுமாறு அறிவுரைகள் வழங்கப்பட்டது.

இனிவரும் காலங்களில் இதுபோன்ற சிறப்பு முகாம்களைத் தொடர்ந்து நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது பொது மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe