குருந்தமலை கோவிலில் குவிந்த பக்தர்கள்: பால்குடம் எடுத்து காவடி ஆடி வழிபாடு

published 2 years ago

குருந்தமலை கோவிலில் குவிந்த பக்தர்கள்: பால்குடம் எடுத்து காவடி ஆடி வழிபாடு

கோவை: மேட்டுப்பாளையம் அருகே உள்ள குருந்தமலையில் குழந்தை வேலாயுத சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் தைப்பூசத்தை முன்னிட்டு தேரோட்டம் நடப்பது வழக்கம்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாகத் தேர் பவனி நிறுத்தப்பட்டு அதற்குப் பதிலாக முருகப்பெருமான் சப்பரத்தில் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்குக் காட்சியளித்தார். இந்த ஆண்டு தைப்பூச தேர்த்திருவிழா கடந்த 3-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேகங்களும், அலங்காரமும் செய்யப்பட்டன.

தொடர்ந்து சனிக்கிழமை காலை திருக்கல்யாண உற்சவமானது கோவில் வளாகத்தில் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை தைப்பூச திருவிழாவையொட்டி தேர்த்திருவிழா நடைபெற்றது. தொடர்ந்து நேற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் திரண்டனர்.

தேக்கம்பட்டி, மருதூர், புங்கம்பாளையம், காரமடை, மங்களக்கரை புதூர் உள்ளிட்ட கிராமங்களிலிருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்தும், காவடி எடுத்தும் வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe