நீலகிரியில் ஹெலிகாப்டர் சேவை : நுாற்றாண்டு கனவு நனவாகுமா?

published 2 years ago

நீலகிரியில் ஹெலிகாப்டர் சேவை : நுாற்றாண்டு கனவு நனவாகுமா?

நீலகிரி: நீலகிரியில் இருந்து ஏற்காடு வரை முதற்கட்டமாக ஹெலிகாப்டர் சேவை துவக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என, சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா மையங்களுக்கு ஆண்டுதோறும், 35 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஊட்டியில் இருந்து சமவெளி பகுதிகளுக்கு, மக்களுக்கான ஹெலிகாப்டர் சேவை துவக்க வேண்டும் என்ற, 100 ஆண்டு கனவு இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

கடந்த, 1990ல் ஊட்டியில் ஹெலிகாப்டர் சேவை தொடங்க முயன்றபோது,'வனம் சூழ்ந்த மலை பகுதியில், ஹெலிகாப்டரால் தொடர்ந்து சப்தம் ஏற்பட்டால் சுற்றுச்சூழலுக்கும், வன விலங்குகளுக்கு பெரும் இடையூறு ஏற்படும்' என, சுற்றுச்சூழல் அமைப்புகள் தெரிவித்தன. இதனால், இழுபறி நிலை ஏற்பட்டது. தற்போது ஹெலிகாப்டர் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுத்து வருகிறது.

சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறுகையில்,''நீலகிரியில் இருந்து ஏற்காடு வரை முதற்கட்டமாக ஹெலிகாப்டர் சேவை துவக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி கிடைத்து, மக்களின் நீண்ட கால கனவு நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது,'' என்றார்.

நீலகிரி ஆவண காப்பக மைய இயக்குனர் வேணுகோபால் கூறுகையில்,''நம் நாடு நவீன வளர்ச்சி அடைந்துள்ள நிலையில், ஊட்டிக்கு வர்த்தக ரீதியான ஹெலிகாப்டர் சேவை, அவசியமாக உள்ளது. அரசு இதற்கான முயற்சியை எடுத்துள்ளது வரவேற்கத்தக்கது,'' என்றார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe