கோவையில் நடைபெற உள்ளது இளையராஜவின் இசைக்கச்சேரி

published 2 years ago

கோவையில் நடைபெற உள்ளது இளையராஜவின் இசைக்கச்சேரி

கோவையின் அனைத்து செய்திகளை அறிந்துகொள்ள எங்களது வாட்ஸ்அப் குழுவில் இணையலாம் : https://chat.whatsapp.com/Gymsw6mPrOK0fU2lrUKwUs

கோவை: கோவையில் இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாளையொட்டி இசைக்கச்சேரி நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கான அறிமுக விழாவில் கிருஷ்ணா கல்வி குழுமங்களின் அறங்காவலர் மலர்விழி குத்துவிளக்கு ஏற்றி டிக்கெட் அறிமுகம் செய்து வைத்தார்.

கோவையில் ஜூன் 2-ம் தேதி  இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாளையொட்டி ராஜா லைவ்  கான்செர்ட் என்ற  நேரடி இசை கச்சேரி நடைபெறுகிறது. 

இளையராஜாவின்  80வது பிறந்த நாளில் கோவையில் ரசிகர்களுக்கு நேரடி இசை நிகழ்ச்சி மூலம் இசை விருந்து வைக்கிறார் "தென்றல் வந்து தீண்டும் போது' மற்றும் "தென்பாண்டி சீமையிலே' போன்ற மெல்லிசைகள் பல மெலோடி பாடல்கள் இங்கு ஒலிக்க உள்ளது. 

ஒன்பது மொழிகளில் சுமார் 1,500 படங்களில் இடம்பெற்ற 8,500 பாடல்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். 
இந்த நிகழ்ச்சிக்கான அறிமுகம் விழாவில் கிருஷ்ணா கல்வி குழுமங்களின் அறங்காவலர் ஶ்ரீமதி. மலர்விழி அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி டிக்கெட் அறிமுகம் செய்து வைத்தார்.நிகழ்ச்சி குறித்து ரசிகர்களுக்கு இசைஞானி இளையராஜா கூறுகையில்,இளையராஜா கூறுகையில்,
‛‛எனது பிறந்தநாளில் கோவையில் இசை நிகழ்ச்சி நடத்துவது மகிழ்ச்சி. நீங்கள் அனைவரும் மிகவும் விரும்பும் பாடல்களை கேட்டு மகிழ வாருங்கள்'' என தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சி குறித்து இதன் ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில்,
மெர்குரி, ஶ்ரீ ஆர்ட்ஸ் மற்றும் அருண் ஈவென்ட்ஸ் இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு  ஏற்பாடு செய்கின்றன. சக்தி மசாலாவுடன்   ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள்  மற்றும் கரூர் வைசா  வங்கியுடன் இணைந்து  வழங்குகிறது. இந்த கச்சேரி ஆனது  இசைஞானி இளையராஜாவுடன் தமிழ் சினிமாவில்  பல  முன்னணி பாடகர் பங்குபெற உள்ளனர் . ஐந்து தசாப்தங்களாக அவர் தனது வாழ்க்கையில் 20,000 க்கும் மேற்பட்ட கச்சேரிகளில் பங்கேற்றுள்ளார்.இந்த நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜாவுடன் தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி பாடகர்கள் மனோ, கார்த்திக், எஸ் பி பி சரண், யுகேந்திரன் வாசுதேவன், விபாவாரி, ஸ்வேதா மோகன், அனிதா, பிரியா ஹிமேஷ், சுர்முகி ஆகியோர் கலந்து கொண்ட இசைஞானி இளையராஜாவின் பாடல்களைப் பாட உள்ளனர்.இந்த நிகழ்ச்சியில் 35,000 முதல் 40,000 ஆயிரம் பேர் வரை பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிக்கெட்டுகளின் விலை ரூ.1000 முதல் ரூ.1,00,000/- வரை இருக்கும்.

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe