கோவை மகளீரே இரவு நேர மாரத்தான் போட்டிக்கு ரெடியா..!

published 2 years ago

கோவை மகளீரே இரவு நேர மாரத்தான் போட்டிக்கு ரெடியா..!

 

கோவையில் முதன்முறையாக பெண்களுக்கான இரவு நேர மாரத்தான் போட்டி வரும் 25ம் தேதி நடைபெற உள்ளது.


கோவை ஜெம் பவுண்டேசன் சார்பில் மகளிருக்கான இரவு நேர மாரத்தான் போட்டி வருகிற 25ம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. இதற்கான டீசர்ட் மற்றும் பதக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்க நிதி திரட்டும் முயற்சியாக இந்த போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மகளிருக்கான மாரத்தான் போட்டி வருகிற 25ம் தேதி  மாலை 6 மணிக்கு வ.உ.சி. மைதானத்தில் துவங்க உள்ளது. 3 கிலோ மீட்டர் , 5 கிலோமீட்டர், 10 கிலோமீட்டர் மற்றும் 21 கிலோ மீட்டர் என 4 பிரிவுகளாக மாரத்தான் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே பங்கேற்க உள்ள இந்த மாரத்தான் போட்டிக்கு தற்போது வரை 3 ஆயிரத்து 500 பெண்கள் பதிவு செய்துள்ளதாகவும், 20க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் இந்த போட்டியி பங்கேற்க உள்ளதாகவும், மாரத்தான் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான பரிசு பொருட்கள், பதக்கங்கள் மற்று சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த மாரத்தான் நிகழ்ச்சியில், தடகள வீராங்கனைகள் பி.டி உஷா, அனிதா பால்ராஜ் மற்றும் பைக் ரேசர் அலிசா அப்துல்லா பங்கேற்று மாரத்த்டான் போட்டியை துவங்கி வைக்க உள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe