கோவையில் வன தின சிறப்பு பேரணி

published 1 year ago

கோவையில் வன தின சிறப்பு பேரணி

கோவை: உலக வன நாளை முன்னிட்டு கோவையில் வனத்தை பாதுகாப்பதன் அவசியம் குறித்து அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் நடத்திய விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தொடங்கி வைத்தார்.

வனத்தை பாதுகாப்பதன் அவசியம் குறித்தும், மரங்களை வளர்க்க வேண்டியது குறித்தும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் மார்ச் மாதம் 21ம் தேதி உலக வன  நாள் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் வனம் சார்ந்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.

அந்த வகையில் கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வனத்துறையினர் இணைந்து கோவை அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நடவு செய்தனர். கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாவட்ட வன அலுவலர் அசோக்குமார், அரசு கலைக்கல்லூரி முதல்வர் உலகி ஆகியோர் மரக்கன்றுகளை நடவு செய்தனர்.

இதனைத்தொடார்ந்து "சிறந்த எதிர்காலத்திற்கு வனத்தை பாதுகாப்போம்" என்ற தலைப்பில் கல்லூரி மாணவர்கள் நடத்திய பேரணி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் மற்றும் வன அலுவலர் தொடங்கி வைத்தனர். இதில் 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் மரங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாக சென்றனர்.

இந்த பேரணியானது கோவை அரசு கலைக்கல்லூரியில் தொடங்கி, அரசு மருத்துவமனை, ரயில் நிலையம், நீதிமன்ற வளாகம் வழியாகச் சென்று மீண்டும் கல்லூரி வளாகத்தில் முடிவடைந்தது.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe