கொடநாடு கொலை,கொள்ளை சம்பவம் தொடர்பாக கோவை முன்னாள் எ.எல்.ஏவிடம் விசாரணை

published 2 years ago

கொடநாடு கொலை,கொள்ளை சம்பவம் தொடர்பாக கோவை முன்னாள் எ.எல்.ஏவிடம் விசாரணை

கோவை: கொடநாடு கொலை,கொள்ளை சம்பவம் தொடர்பாக முன்னாள் எ.எல்.ஏ ஆறுக்குட்டியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடடு பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு காவலாளி ஓம்பகதூர் என்பவர் கொலை செய்யபட்டு அங்கிருந்த பொருட்களை கும்பல்  திருடிசென்றது. இது தொடர்பாக நீலகிரி மாவட்ட காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக இருந்த கனகராஜிற்கு இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

இந்நிலையில் கனகராஜ் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சாலை விபத்தில் கனகராஜ்  உயிரிழந்தார்.
கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளை சம்பவம் தொடர்பாக கனகராஜ் ஏற்பாடு செய்த சயான்,மனோஜ் உள்ளிட பலரை காவல் துறையினர் கைது செய்து கனகராஜ் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் கார் ஓட்டுநராக இருந்த கனகராஜ் பணிநீக்கம் செய்யப்பட்டதும் பின்னர் சிறிது காலம் கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டியிடம் ஓட்டுனராக பணியாற்றியதும் இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. 

இதனிடையே மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் சுதாகர் மேற்பார்வையில் 4 தனிப்படைகள் கொடநாடு கொலை,கொள்ளை வழக்கு குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டது.இந்த தனிப்படைகள் கோவை,நீலகிரி உட்பட பல்வேறு பகுதிகளில் முகாமிட்டு  தனித்தனியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

நீலகிரி மாவட்ட கண்காணப்பாளர் ஆஷிஷ் ராவத் தலைமையிலான தனிப்படை அதிகாரிகள் இந்த வழக்கில் தொடர்புடைய  முக்கிய நபர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.ஜெயா டிவியின் இயக்குனர்களில் ஒருவரான விவேக் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கோவை வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட நிலையில் இன்று கவுண்டம்பாளையம் சட்ட மன்ற தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ  ஆறுகுட்டியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் மதியம் 12 மணி முதல் விசாரணையானது நடைபெற்று வருகிறது.ஓட்டுனராக பணிபுரிந்த போதும் அதன் பின்பும் இருவருக்கும் இருந்த தொடர்புகள் குறித்தும் கொடநாடு சம்பவத்திற்கு முன்பாக போனில் இருவரும் பேசிக் கொண்டது குறித்தும் விசாரணையானது நடத்தப்பட்டு வருகின்றது.

மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் மற்றும் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத்  உட்பட காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe