தினமும் தர்பூசணி சாப்பிடுவது சரியா?

published 1 year ago

தினமும் தர்பூசணி சாப்பிடுவது சரியா?

உலக நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் (CDC) ஆய்வின்படி, நம்முள் 10% மட்டுமே ஒவ்வொரு நாளும் நம் உடலுக்கு தேவையான, பரிந்துரைக்கப்பட்ட இரண்டு கப் பழங்களை சாப்பிடுகிறோம். என்ன தான் பழங்கள் நம் உடலுக்கு ஆரோக்கியத்தை தந்தாலும் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடும்.

கோடை காலத்தில் நாம் தர்பூசணியை அதிகம் விரும்பி உண்ணுவது வழக்கம். ஆனால் சிலருக்கு தர்பூசணி பழம் உண்பதால் வயிற்று கோளாறுகள் ஏற்படுவதும் வழக்கம் தான். அது என் என்பது குறித்து இங்கே பார்க்கலாம்...

இது குறித்து நிபுணர்கள் கூறுகையில், "தர்பூசணியில் கலோரிகள் மற்றும் சர்க்கரை குறைவாக இருப்பதால், நீண்ட கால பாதிப்பைப் பற்றி யோசிக்காமல் ஒவ்வொரு நாளும் தர்பூசணியை சாப்பிடலாம். ஆனாலும் நாம் உண்ணும் பழங்களின் வகைகளை மாற்ற முயற்சிப்பது நம் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. வெவ்வேறு பழங்களில் வெவ்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளதால், பலவகை பழங்களை மாற்றி சாப்பிடுவது உடலுக்குத் தேவையான அனைத்து சத்துகளையும் பெறுவதை உறுதி செய்யும்." என்றனர்.

கோடை காலத்தின் வெப்பமான மதிய நேரத்தில் உணவிற்கு பதிலாக ஒரு முழு தர்பூசணியின் பாதி அல்லது அதற்கு மேற்பட்ட அளவை நாம் சாப்பிட முற்படும் நேரங்களிலும் கூட, பொதுவான பரிந்துரைக்கேற்ப ஒரு நேரத்தில் ஒரு கப் மட்டும் சாப்பிடுவதே நல்லது என்கின்றனர் மருத்துவர்கள்.

தர்பூசணி பழத்தில் எளிதில் புளிக்கக்கூடிய ஆலிகோ-சாக்கரைடுகள், சாக்கரைடுகள், மோனோ-சாக்கரைடுகள் மற்றும் பாலியோல்கள் போன்ற குறுகிய சங்கிலி சர்க்கரைகள் அதிகமாக இருப்பதால், அதனை உண்ணும் பொழுது சிலருக்கு செரிமானம் செய்வதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. அதிக அளவில் உட்கொள்ளும்போது வயிறு வீக்கம், புளித்த ஏப்பம் அல்லது வயிற்றில் அசௌகரிய உணர்வை ஏற்படுத்தக்கூடும் என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

அதே போல் நீரிழிவு நோயாளிகளும் இனிப்பு சுவை அதிகமுள்ள தர்பூசணியை உட்கொள்ளவதில் கவனம் செலுத்த வேண்டும். அதிக இனிப்பான பழங்களை சாப்பிடுவது இரத்த சர்க்கரையின் அளவை ஏற்ற வழிவகுக்கும் என்பதால் இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்தானது.

தர்பூசணி பழங்கள் எளிதில் புளித்து விடக்கூடியவை என்பதால் தர்பூசணி பழங்களை பாதுகாக்கும் முறைகளிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். சாதாரண அறை வெப்பநிலையில் அவற்றை வைப்பது சிறந்த சுவையைத் தக்கவைத்துக்கொள்வதோடு அவற்றின் ஊட்டச்சத்துக்களையும் அப்படியே வைத்திருக்க உதவும். இருப்பினும் அவை வெட்டப்பட்டவுடன், அவற்றை குளிர்சாதன பெட்டியிலேயே வைக்க வேண்டும். எனினும் வெட்டப்பட்ட பழங்களை அதிகபட்சம் சில நாட்களுக்கு மட்டுமே உபயோகிப்பது சிறந்தது.

சுவையான தர்பூசணி பழத்தை எப்படி பார்த்து வாங்கனும்-னு இத படிச்சு தெரிஞ்சுக்கோங்க… https://newsclouds.in/news/2396/Male_of_female..._Which_watermelon_to_buy...

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe