உடுமலை வழியாக கூடுதல் ரயில்கள் இயக்க பயணிகள் வலியுறுத்தல்

published 1 year ago

உடுமலை வழியாக கூடுதல் ரயில்கள் இயக்க பயணிகள் வலியுறுத்தல்

கோவை: உடுமலை வழியாக, கோடை காலத்தையொட்டி கூடுதல் ரயில்கள் இயக்க ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திண்டுக்கல் - பாலக்காடு வழித்தடம், அகல ரயில்பாதையாக மாற்றப்பட்டு, 2015ல், பயன்பாட்டுக்கு வந்தது. பின்னர், மின்மயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு வசதிகள் படிப்படியாக மேம்படுத்தப்பட்டது. தற்போது உடுமலை ரயில்வே ஸ்டேஷன் வழியாக, கோவை - மதுரை, பாலக்காடு - திருச்செந்துார், திருவனந்தபுரம் - மதுரை, பாலக்காடு - சென்னை ஆகிய ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இம்மாதத்துடன், பள்ளிதேர்வுகள் முடிவடைய உள்ளன. கோடை விடுமுறை துவங்கியவுடன், மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ரயில்களை அதிக அளவில் பயன்படுத்துவர். ஆனால் தற்போது செல்லும் ரயில்கள் அவர்களுக்கு போதுமானதாக இல்லை. எனவே, கோடை காலத்தில் தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்க ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் மற்றும் ரயில் பயணியர் எதிர்பார்க்கின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe