கோவையில் டிக்கெட்டுக்கு சில்லரை கொடுக்காத பயணி மீது தாக்குதல் நடத்திய டிரைவர்- கண்டக்டர்

published 2 years ago

கோவையில் டிக்கெட்டுக்கு சில்லரை கொடுக்காத பயணி மீது தாக்குதல் நடத்திய டிரைவர்- கண்டக்டர்

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/GKcHrWOaZYqGX1TFQywYIz

கோவை: கோவை மாவட்டம், அன்னூர் அடுத்த பொங்கலூர் கிராமத்தைச் சேர்ந்தவர்  ரங்கசாமி. கூலித்தொழிலாளி. இவர்  சம்பவத்தன்று அன்னூரில் இருந்து புளியம்பட்டி செல்வதற்காக தனியார் பஸ்சில் ஏறினார்.

அப்போது டிக்கெட் வாங்கும்போது ரங்கசாமி, கண்டக்டரிடம் சரியான சில்லரை கொடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் கண்டக்டருக்கும், ரங்கசாமிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் முற்றியது. இதனை பார்த்த பஸ் டிரைவர் சத்தியமங்கலம் சாலையில் பசூர் அருகே பஸ் நிறுத்தினார். பின்னர் கண்டக்டருடன் சேர்ந்து ரங்கசாமியிடம்  தகராறில் ஈடுபட்டனர்.

இதனால் ரங்கசாமி  பஸ்சில் இருந்து இறங்கினார். கீழே இறங்கிய ரங்கசாமியை விடாமல் இருவரும்  சரமாரியாக தாக்கினர். இதில் ரங்கசாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்தார். அதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். இந்த வீடியோ தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏற்கனவே டிரைவர்கள் பஸ்சை அதிவேகமாக இயக்கி வருவதாகவும், பாதுகாப்பின்றி படியில் தொங்கி கொண்டு செல்லும் அளவுக்கு, கூடுதல் பயணிகளை ஏற்றிச் செல்வதாகவும்  பல்வேறு புகார்கள் எழுந்து வருகிறது.

இந்த நிலையில், தனியார் பஸ் ஊழியர்கள் சில்லரைக்காக பயணி ஒருவரை தாக்கிய  சம்பவம் பஸ் பயணிகளிடையே கடும் அதிர்ச்சியை  ஏற்படுத்தி உள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe