பொதுமக்களை விரட்டிய யானை

published 2 years ago

பொதுமக்களை விரட்டிய யானை

வேடிக்கை பார்க்க சென்று புகைபடம் எடுத்த சுற்றுலா பயணிகள் யானைகள் துரத்திய சம்பவத்தால் பரபரப்பு

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கடந்த மூன்று வாரத்திற்கு மேலாக உணவு மற்றும் தண்ணீர் தேடி சமவெளிப் பகுதிகளில் இருந்து மலைப் பகுதிக்கு யானைகள் இடம் பெயர துவங்கிய நிலையில் குன்னூர் அருகே உள்ள காட்டேரி பூங்கா அருகே காட்டு யானைக் கூட்டம் தனியார் தேயிலை தோட்ட பகுதியில் முகாமிட்டு உள்ளது.

பூங்காவிற்கு சுற்றுலா வரும் யானைகள் கூட்டம் இருப்பதை அறிந்து அங்கு புகைப்படம் எடுப்பது யானைகளை கண்டவுன் கூச்சலிடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.


இந்நிலையில் குட்டிகளுடன் உலா வந்த காட்டு யானை கூட்டத்தை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில் அங்கிருந்த சுற்றுலா பயணிகள் சுற்றுலா பயணிகளும் கூச்சலிட்டதால் கூட்டத்தில் இருந்த ஒரு யானை வனத்துறையினரையும், சுற்றுலா பயணிகளையும் துரத்த தொடங்கியது.
இதனையடுத்து வனத்துறையினர் மற்றும் சுற்றுலா பயணிகள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

வனவிலங்குகளை தொந்தரவு செய்வது ஆர்வ மிகுதியால் புகைபடங்கள் எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் சமூக ஆர்வலர்கள் முன்வைக்கின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe