இனி டென்ஷன் வேண்டாம்... ரூ.169 கோடியில் 'ஸ்மூத்' ஆக மாறுகிறது கோவையின் 456 சாலைகள்...!

published 2 years ago

இனி டென்ஷன் வேண்டாம்... ரூ.169 கோடியில் 'ஸ்மூத்' ஆக மாறுகிறது கோவையின் 456 சாலைகள்...!

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/GKcHrWOaZYqGX1TFQywYIz

கோவை: கோவை மாநகரில் 456  சாலைகள் ரூ.169 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட உள்ளன.

கோவை மாநகரில் பிரதான பிரச்சனையாக இருப்பது முறையான சாலை வசதிகள் இல்லாததே. எங்கு பார்த்தாலும் குண்டும் குழியுமான சாலைகளால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். ஆங்காங்கே விபத்துகளும் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

மாநகரில் உள்ள சாலைகள் சீரமைக்காமல் இருப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல் இருந்ததே காரணமாக இருந்தது.

இந்த நிலையில் மாநகரில் உள்ள 456 சாலைகளை மேம்படுத்த ரூ.169 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஒரு வழியாக கோவை மக்களின் சாலை பயண அனுபவத்தை மேம்படுத்தும் முழற்சியில் இறங்கியுள்ளது கோவை மாநகராட்சி. இதன் நோக்கில் கோவையிலுள்ள 456 சாலைகளை சீரமைப்பு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் பெறப்பட்ட மக்கள் மன்ற மனுக்களின் அடிப்படையில் இந்த 456 சாலைகள் மேம்பாடு செய்வதற்காக தேர்வு செய்யப்பள்ளன.

மேலும், இணைப்பு சாலைகளை மேம்படுத்த உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதியின் கீழ் ரூ.144 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர சாலை மேம்பாட்டு பணிக்காக தமிழ்நாடு நிலையான நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.44 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், சேதமடைந்த சாலைகளில் 'பேட்ச் ஒர்க்' செய்ய ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில் 
"சாலைகளின் தற்போதைய நிலையைப் பொறுத்து பல்வேறு  கட்டங்களாக இந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. தற்போது சீரமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள 456 சாலைகள் மிகவும் மோசமான நிலையிலுள்ளன. தவிர மறாமத்து வேலை மட்டும் தேவைபடுகின்ற சாலைகளின் பட்டியலும் தயாரிக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர மேலும் 289 சாலைகள் சீரமைக்கப்படவுள்ளன. இதற்கான பரிந்துரையை கடந்த மே 8ம் தேதி அமைச்சர் கே. என். நேரு தனது கோவை பயணித்தின் போது செய்துள்ளார்.

கூடுதலாக சாலை இணைப்பிலுள்ள இடைவெளிகளும் சரி செய்யப்படும். இதனால் சாலை போக்குவரத்துலுள்ள இடர்பாடுகளை நீக்கி தடையற்ற போக்குவரத்தை மேம்படுத்த முடியும்." என்றனர்.

எப்படியோ கோவை சாலைகள் இனி 'ஸ்மூத்' ஆகப்போகிறது என்பது நம் மக்களுக்கு அளப்பறிய மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

-
Newsclouds Team

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe