கோவையிலிருந்து சார்ஜாவிற்கு 14 டன் காய்கறிகள் விமான மூலம் ஏற்றுமதி

published 1 year ago

கோவையிலிருந்து சார்ஜாவிற்கு 14 டன் காய்கறிகள் விமான மூலம் ஏற்றுமதி

கோவை: விஷு பண்டிகையை முன்னிட்டு கோவையில் இருந்து கடந்த 7 நாட்களில் மொத்தம் 14 டன் எடையிலான காய்கறிகள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. 

கோவையிலிருந்து ஷார்ஜாவுக்கு வாரத்தில் 5 நாட்கள் விமான சேவை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு முறையும் 3 டன் எடையிலான சரக்குகள் விமானத்தில் கொண்டு செல்லப்படுவது வழக்கம்.

இந்நிலையில், மலையாள புத்தாண்டு தினமான விஷுவை முன்னிட்டு கடந்த ஒரு வாரத்தில் காய்கறிகள் மட்டுமே அதிக அளவு கையாளப்பட்டுள்ளன. இதுகுறித்து, விமான நிலைய அதிகாரிகள் கூறும் போது, “மலையாள புத்தாண்டை முன்னிட்டு கடந்த 7 நாட்களில் கோவையிலிருந்து வழங்கப்பட்ட 5 விமான சேவையில் மொத்தம் 15 டன் எடையிலான சரக்குகள் கோவையிலிருந்து ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இவற்றில் 14 டன் சரக்குகள் காய்கறிகளாகும். கோவக்காய், வாழைக்காய், பீன்ஸ், வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இவை தவிர்த்து 1 டன் எடையிலான மாங்காய் மற்றும் ரோஜாப்பூ, சூரியகாந்திப்பூ உள்ளிட்ட மலர்களும் ஏற்றுமதி செய்யப்பட்டன.” என்றனர்.

கோவை விமான நிலையத்தில் தினமும் சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை, உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும் ஷார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமான சேவை வழங்கப்படுகிறது. தற்போது தினமும் 25 விமானங்கள் இயக்கப்படுகின்றன. பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை கால விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் எதிர்வரும் நாட்களில் விமான சேவை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe