டிகிரி, டிப்ளமோ போதும்!தமிழக சுற்றுலா மேம்பாட்டு வாரியத்தில் வேலை…!

published 1 year ago

டிகிரி, டிப்ளமோ போதும்!தமிழக சுற்றுலா மேம்பாட்டு வாரியத்தில் வேலை…!



கோவை: தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. டிகிரி, டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். 

பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.40 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகத்தில் (Tamil Nadu Tourism Development Corporation அல்லது TTDC) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி ஏஜிஎம்/மேனேஜர் - (Housekeeping), ஏஜிஎம்/மேனேஜர்(Boating and Adventure Tourism), ஏஜிஎம்-Package Tours ஆகிய பணிகளுக்கு தலா ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் மத்திய, மாநில அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் டிப்ளமோ, டிகிரி படித்திருக்க வேண்டும். ஏஜிஎம்/மேனேஜர் - ஹவுஸ்கீப்பிங் பணிக்கு ஹோட்டல் மேனேஜ்மென்ட், ஹாஸ்பிட்டாலிட்டி மற்றும் ஹோட்டல் அட்மினிஸ்ட்ரேஷன், ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் கேட்டரிங் டெக்னாலஜி, ஹோஸ்பிட்டாலிட்டி, டிராவல் மற்றும் டூரிசம் படிப்பை முடித்திருக்க வேண்டும். ஏஜிஎம்/மேனேஜர் -போர்டிங் மற்றும் அட்வென்ட்சர் டூரிசம், ஏஜிஎம்-பேக்கேஜ் டூர்ஸ் பணிகளுக்கு டிப்ளமோ/ டிகிரி பிரிவில் டூரிசம் அட்மினிஸ்ட்ரேஷன், டூரிசம் மற்றும் டிராவல் மேனேஜ்மென்ட், ஹோட்டல் மேனேஜ்மென்ட், டிராவல் மற்றும் டூரிசம் படிப்புகளை படித்திருக்க வேண்டும்.

பணிக்கு விண்ணப்ப கட்டணம் எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. விண்ணப்பம் செய்வோர் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். 

எழுத்து தேர்வு என்பது கிடையாது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ttdc.co.in இணையதளம் சென்று விண்ணப்பம் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து The Managing Director, TTDC Ltd., Tourism Compex, No-2 Wallajah Road, Triplicane, Chennai - 2 என்ற முகவரிக்கு ஏப்ரல் 15க்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் சாப்ட் காப்பியை [email protected] என்ற இமெயிலில் அனுப்பி வைக்க வேண்டும்.

பணிக்கு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய 
https://www.tamilnadutourism.tn.gov.in/img/rec_note.pdf

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe