வெள்ளியங்கிரி மலையேறிய உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பலி

published 2 years ago

வெள்ளியங்கிரி மலையேறிய உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பலி

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/GKcHrWOaZYqGX1TFQywYIz

கோவை : கோவை மாவட்டம் போளுவாம்பட்டி அடுத்த பூண்டி திருக்கோவில் மலையேற்றத்திற்க்கு வந்த சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை போளுவாம்பட்டியை அடுத்த பூண்டி பகுதியில் வெள்ளிங்கிரி மலை திருக்கோவிலில், அமைந்துள்ளது. ஏழு மலைகளை ஏறி வெள்ளியங்கிரி ஆண்டவனை தரிசனம் செய்ய பக்தர்கள் பல மாவட்டங்களில் இருந்து வருவது வழக்கம்.

அந்தவகையில், புதன்கிழமை சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரான, இளஞ்செழியன் (55) என்பவரும் மலையேற்றத்தை தொடங்கினார். அவர் ஐந்தாவது மலை ஏறும் போது திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.

இதனை பார்த்த சக பக்தர்கள், அவருக்கு முதலுதவி அளித்தனர். ஆனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து ஆலாந்துறை  காவல்துறையினருக்கு  தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர்  நெடுஞ்செழியனின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து போளுவாம்பட்டி வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe