மேட்டுப்பாளையத்தில் தட்டில் உலக்கையை நிற்க வைத்த பொதுமக்கள்

published 1 year ago

மேட்டுப்பாளையத்தில் தட்டில் உலக்கையை நிற்க வைத்த பொதுமக்கள்

கோவை: ஆஸ்திரேலியாவில் நேற்று முழு சூரிய கிரகணம் காலை 7.20 மணி முதல் மதியம் 12.20 மணி வரை காணப்பட்டது. இந்த சூரிய கிரகணம் நேற்று 3 நிலைகளில் தெரியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்தியாவில் சூரிய கிரகணத்தின் தாக்கம் உள்ளதா? என பலர் ஆர்வத்துடன் பார்த்து கொண்டிருந்தனர். இதற்கிடையே மேட்டுப்பாளையம் அருகே ஆலாங்கொம்பு வீராசாமி நகரை சேர்ந்த விஜய்ஆனந்த் குடும்பத்தினர் வெண்கலத் தட்டில் தண்ணீர் ஊற்றி உலக்கையை நிற்க வைத்து பார்த்தனர். 

அப்போது வெண்கல தட்டில் உலக்கை செங்குத்தாக நின்றது. சூரிய கிரகணத்தின் தாக்கம் இந்தியாவில் உள்ளதால் தண்ணீர் ஊற்றி வெண்கல தட்டில் உலக்கை நிற்பதாக கூறினர்.

இப்படி உலக்கை வாசல் முன்பு நிற்பதை அந்த பகுதி மக்கள் அறிந்தனர். அவர்கள் ஆர்வத்துடன் அங்கு சென்று பார்த்தனர். மேலும் அதனை புகைப்படமும் எடுத்தனர். கிரகணம் முடிந்தபின் உலக்கை தானாக கீழே விழுந்து விடும் என பெரியோர்கள் கூறினா்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe