பெங்களூரு மாடலில் மாறப்போகுது கோவை.. பெங்களூர் விசிட் அடித்த கோவை அதிகாரிகள்..!

published 2 years ago

பெங்களூரு மாடலில் மாறப்போகுது கோவை.. பெங்களூர் விசிட் அடித்த கோவை அதிகாரிகள்..!

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்:  https://chat.whatsapp.com/BD91mw8tExzL8KfiPGY4km

கோவை: பெங்களூருவைப் போல கோவையில், 'ஸ்மார்ட் ரோடு' மற்றும் 'ஸ்மார்ட் பார்க்கிங்' வசதிகளை உருவாக்க, கோவை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்குத் தகவல் திரட்டும் பொருட்டு கோவை மாநகர அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர்கள், பெங்களூருவுக்கு சென்று பார்வையிட்டு வந்துள்ளனர்.

'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ், கோவை ஆர். எஸ். புரம், டி. பி. ரோட்டில், பல கோடி ரூபாய் செலவில், 'மாடல் ரோடு' அமைக்கப்பட்டது. இந்த சாலை கோடிக்கணக்கில் செலவழித்த பொழுதிலும் எதிர்பார்த்த அளவுக்கு  அமையாமல் சாதாரண சாலையைப் போல காட்சி அளிக்கிறது.

இதற்கு அடுத்தபடியாக தற்போது ரேஸ்கோர்ஸ் பகுதியைச் சுற்றியுள்ள சாலை, "மாடல் சாலையாக" மாற்றப்படவுள்ளது. நடைபாதை ஏற்படுத்தும் பொருட்டு ரேஸ்கோர்ஸ் பகுதியிலுள்ள பல மரங்கள் அழிக்கப்பட்டு, சிமெண்ட் நடைபாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆங்காங்கே அலங்காரத்திற்காகவும், பொது மக்கள் பயன்பாட்டிற்காகவும் ஊஞ்சல் போன்ற குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்களும் அலங்கார செடிகள் வைக்கப்பட்டுள்ளன. மாநகராட்சிக்கு வருமானம் ஈட்டும் பொருட்டு வர்த்தக ரீதியான டிஜிட்டல் விளம்பர பலகைகள் நிறுவப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து பெரிய கடை வீதி, ராஜ வீதி, கிராஸ்கட் ரோட்டில், பிரத்யேகமாக சைக்கிளுக்கான பாதை மற்றும் நடைபாதை உருவாக்கப்படவுள்ளதாக  மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதற்கு முன் கோவையில் போடப்பட்டுள்ள 'ஸ்மார்ட் ரோடுகளைப் போல் இல்லாமல், மேம்படுத்தப்பட்ட தரத்தில், வேறு சிறந்த தொழில்நுட்பத்தைக் கொண்டு சாலை அமைக்கும் பொருட்டு, மாநகராட்சி துணை ஆணையர் ஷர்மிளா தலைமையில் உதவி பொறியாளர்கள் சரவணக்குமார் மற்றும் விமல், கவுன்சிலர்கள் சுமா மற்றும் முனியம்மாள் ஆகியோர் அடங்கிய ஐவர் குழு பெங்களூரு சென்று பார்வையிட்டு வந்துள்ளனர். 

அங்குள்ள சாலைகளிலுள்ள நடைபாதை வசதிகள், வாகன நிறுத்த வசதிகள் மற்றும் பிற பொது பயன்பாடிற்கான திட்டங்களை பார்வையிட்ட குழுவினர், மாநகராட்சிக்கு பல பரிந்துரைகளை வழங்கியுள்ளன. 

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "பெங்களூருவை மாடலாகக் கொண்டு குடிநீர் மற்றும் பாதாள சாக்கடைக்கான குழாய்கள், தொலைபேசி இணைப்புக்கான கட்டமைப்பு, மழை நீர் வடிகால், 'ஸ்மார்ட் பார்க்கிங்' ஆகியவை கோவையில் ஏற்படுத்தப்படும். பெய்டு பார்க்கிங், மல்டி லெவெல் பார்க்கிங் போன்ற திட்டங்களுக்கான ஆலோசனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன." என்றனர். 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe