வழிப்பறியில் ஈடுபட்ட நபரின் கூட்டாளியை கைது செய்த கோவை மாவட்ட காவல்துறையினர்

published 1 year ago

வழிப்பறியில் ஈடுபட்ட நபரின் கூட்டாளியை கைது செய்த கோவை மாவட்ட காவல்துறையினர்

கோவை: கோவை மாவட்டம் துடியலூர் காவல் நிலைய பகுதியில் குஷ்பூ என்பவர் வசித்து வருகிறார். கடந்த (21.03.2023) அன்று அவர் வீட்டில் கேட்டினை திறக்கும் போது அவரது கழுத்தில் இருந்த 4½ பவுன் தங்க செயினை அடையாளம் தெரியாத 2 நபர்கள் திருடிச் சென்றனர். 

இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட நபர் துடியலூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அதில் தொடர்புடைய நாகராஜ் மகன் ஜெகநாதன் என்ற நபரை காவல் துறையினர் கைது செய்து திருடிய தங்க நகையை கைப்பற்றி மேற்படி ஜெகநாதனை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். 

மேலும் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட மற்றொரு எதிரியை விரைந்து கண்டுபிடிக்கும் பொருட்டு, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பத்ரிநாராயணன்,  அவர்களின் உத்தரவின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு எதிரி சரவணனை தேடி புலன் விசாரணை செய்து வந்த நிலையில், இன்று (24.04.2023) இவ்வழக்கில் தொடர்புடைய முருகன் மகன் சரவணன்(25) என்பவரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.

தலைமறைவாக இருந்த குற்றவாளியை துரிதமாக செயல்பட்டு கைது செய்த  தனிப்படை காவல்துறையினரை காவல் கண்காணிப்பாளர் அவர்கள்  வெகுவாக பாராட்டினார்கள்.

வீட்டில் தனியாக இருப்பவர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தின் தொலைபேசி எண்கள் மற்றும் காவல் கட்டுப்பாட்டு அறை எண் போன்ற எண்களை தவறாது வைத்திருக்க வேண்டும் என்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

காவல் கட்டுப்பாட்டு அறை எண்: 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண்: 77081-00100 மேற்கண்ட எண்ணையை  தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe