கொலை முயற்சி வழக்கில் கைதான நபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்

published 1 year ago

கொலை முயற்சி வழக்கில் கைதான நபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்

கோவை: கோவை மாவட்டம் வடக்கிபாளையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும்   பழனிச்சாமி மகன் பத்ரன் (வயது 43) கடந்த 2019-ஆம் ஆண்டு அவரது மனைவியின் தாயாரை, கொலை செய்ய முயற்சித்த  குற்றத்திற்காக வடக்கிபாளையம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கு பொள்ளாச்சி உதவி அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் விசாரணை  இன்று (24.04.2023) முடிவு பெற்று குற்றவாளி பத்ரனுக்கு 7 ஆண்டு சிறைதண்டனை மற்றும் ரூபாய் 5,000/- அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன்விசாரணை மேற்கொண்ட புலன்விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய நீதிமன்ற தலைமை காவலர் திரு. அசோக் குமார் (HC 1341) ஆகியோர்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பத்ரிநாராயணன் அவர்கள்  பாராட்டினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe