கோவை அரசு மருத்துவமனை அருகே ஏர் ஆரணை ஒலிக்க விடும் பேருந்துகள்: நோயாளிகள் அவதி

published 1 year ago

கோவை அரசு மருத்துவமனை அருகே ஏர் ஆரணை ஒலிக்க விடும் பேருந்துகள்: நோயாளிகள் அவதி
கோவை: கோவை அரசு மருத்துவமனைக்கு எதிர்புறம் பேருந்து நிலையம் உள்ளது. அனைத்து பேருந்துகளும் இங்கு வந்து திரும்பிச் செல்லும் நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் மட்டுமன்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து நோயாளிகள் இங்கு வந்து இறங்கி அரசு மருத்துமனைக்கு செல்வது வழக்கம். ஒரு நாளைக்கு சராசரியாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் அரசு மருத்துமனைக்கு வருவதும் அங்கிருந்து சிகிச்சை முடிந்து வெளியேறுவதும் வழக்கம். இந்நிலையில் அரசு மருத்துமனைக்கு எதிர்புறம் உள்ள பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்துகளும், அரசு பேருந்துகளும் போட்டி போட்டுக் கொண்டு ஏர் ஹாரன்களை ஒலிக்கின்றனர். அந்த பேருந்து நிலையத்தின் பரப்பளவு மிகவும் குறைவானதாகும். ஒரு பேருந்து வெளியே சென்றால் மட்டுமே, பின்னால் வரும் அடுத்த பேருந்து வெளியேற முடியும். டைமிங் பிரச்சினை காரணமாக ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு செல்வது அங்கு வாடிக்கையாக நடந்து வருகிறது. இதனால் ஏர்ஹாரன் சத்தம் அந்த இடத்தில் எந்த நேரமும் அதிகமாக ஒலித்துக் கொண்டிருப்பதை காண முடிகிறது. இந்த சத்தம் காரணமாக அங்கு வரும் நோயாளிகளுக்கு பதட்டம், மன அழுத்தம் ஏற்படும் நிலை உள்ளது. இது குறித்து நோயாளிகள் கூறுகையில், "இவர்கள் அடிக்கும் ஏர்ஹாரன் பிரசவ வார்டு வரை கேட்கிறது. பொதுவாக சிகிச்சையில் இருக்கும் நோயாளியிடம் சத்தமாக பேசக்கூடாது என்று கூட மருத்துவர்கள் அறிவுறுத்துவது வழக்கம். ஆனால் இந்த ஏர் ஹாரன் சத்தங்கள் நோயாளிகளின் நெஞ்சை பதற வைக்கிறது. டிரைவர்கள் இதனை புரிந்து கொண்டு செயல்பட்டால் மட்டுமே நல்லது." என்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், "பொதுவாக நகர்ப்புற எல்லைக்குள் ஏர்ஹாரன் அடிக்க கூடாது என்று வட்டாரப் போக்குவரத்து துறை அறிவுறுத்தியுள்ளது. ஆனாலும் அதையும் மீறி ஒரு சில டிரைவர்கள் இவ்வாறு செயல்பட்டு வருகிறார்கள். அவ்வாறு செயல்படும் டிரைவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். வட்டாரப் போக்குவரத்து துறையினரும் போக்குவரத்து காவல் துறையினரும் இதனை அன்றாடம் கண்காணிக்க வேண்டும். அவ்வாறு கண்காணிக்கும் பட்சத்தில் நகர்ப்புற எல்லைக்குள் அமைதியான பயணத்தை மேற்கொள்ளலாம்." எனக் கூறினர்.
Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe