அரசு அங்கீகாரம் இல்லாமல் தயாரிக்கப்படும் குளிர்பானங்களை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியரிடம் மனு

published 2 years ago

அரசு அங்கீகாரம் இல்லாமல் தயாரிக்கப்படும் குளிர்பானங்களை விற்பனை செய்பவர்கள்  மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியரிடம் மனு

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்:  https://chat.whatsapp.com/LJbd9JNXLHQL1siiXxBROA

கோவை: இந்துஸ்தான் மக்கள் சேவை இயக்கத்தின் நிறுவனத் தலைவர் லோட்டஸ் மணிகண்டன் தலைமையில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய லோட்டஸ் மணிகண்டன் கூறும்பொழுது:

கோவை மாவட்டம் முழுவதும் பெட்டிக் கடை, மளிகைக் கடை, உணவகங்கள், மற்றும் இரயில் நிலையம், பேருந்து நிலையம், மற்றும் பள்ளிகளின் அருகில் கூட பல்வேறு கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றனர். 10 ரூபாய்க்குக் குளிர்பானங்கள் விற்பனை செய்கின்றனர். இந்த வகை குளிர்பானங்கள், முறையாக அரசிடம் எந்தவித அங்கீகாரம் பெறாமல் விற்பனை செய்வதுடன், இதனைக் காலாவதி ஆன பின்பும் விற்பனை செய்து வருகின்றனர். 

இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வாந்தி மயக்கம் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டு வருகின்றது. எனவே ஆட்சியர் இந்த விஷயத்தில் தலையிட்டு இது போன்ற குளிர்பானங்களுக்குத் தடை விதிக்க வேண்டும்.", என்று தெரிவித்தார். 
முன்னதாக அந்நிறுவனத்தினர் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும், குளிர்பானங்களைத் தரையில் கொட்டி தனது எதிர்ப்பை பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe