கோவையிலுள்ள லிட்டில் கிங்டம் பள்ளியால் குழந்தைகளின் கல்வி கேள்விக்குறி: பாதிக்கப்பட்டவர்கள் ஆட்சியரிடம் மனு

published 2 years ago

கோவையிலுள்ள லிட்டில் கிங்டம் பள்ளியால்  குழந்தைகளின் கல்வி கேள்விக்குறி: பாதிக்கப்பட்டவர்கள் ஆட்சியரிடம் மனு

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்:  https://chat.whatsapp.com/LJbd9JNXLHQL1siiXxBROA

கோவை: கோவை மாவட்டம் கணபதிமா நகர் பகுதியில் செயல்பட்டு வருகின்ற லிட்டில் கிங்டம் என்ற பள்ளியில் பயின்று வந்த குழந்தைகளின் பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர். 

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மாணவர்களின் பெற்றோரான சென்னக்கிருஷ்ணன் என்பவர் கூறும் போது:

"கணபதிமா நகர் பகுதியில் செயல்பட்டு வருகின்ற, லிட்டில் கிங்டம் என்ற பள்ளியில் எல்கேஜி முதல் 8ம் வகுப்பு வரை செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளியில் ஆர்டிஇ என்ற திட்டத்தின் கீழ் எங்களது குழந்தைகளைச் சேர்த்துள்ளோம். எல்கேஜி முதல் 8 ம் வகுப்பு வரை 28 மாணவர்கள் பயின்று வரும் நிலையில், பள்ளி நிர்வாகம் திடீரெனப் பள்ளியை மூடுவதாகத் தெரிவித்து மூடிவிட்டனர். இதற்காக மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து பள்ளி நிர்வாகம் முறையாகப் பேசவில்லை. எந்த நடவடிக்கைகளையும் முறையாகப் பின்பற்றாமல் பள்ளி நிர்வாகம் பள்ளியை மூடியுள்ளது. இதனால் எங்களது குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது. 

தற்போது அருகிலுள்ள மற்ற தனியார்ப் பள்ளிகள்  வருகின்ற 13ம் தேதி திறக்கப்படும் நிலையில் ஆர்டிஇ முறையில் எங்களது குழந்தைகளைச் சேர்ப்பது கடினமாகி உள்ளது. அனைத்துப் பள்ளிகளிலும் ஆர்டிஇ முறையில் மாணவர்கள் சேர்க்கை முடிவடைந்துவிட்டது என்பது கவலை அளிக்கிறது.  இந்த பள்ளியை நம்பியிருந்த 28 மாணவர்களின் கல்வி தற்போது கேள்விக்குறியாகியுள்ளதால் இதுகுறித்து பள்ளி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுத்து எங்களின் குழந்தைகளின் கல்விக்குத் தீர்வு காண வேண்டும்.", என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதாகத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe