நம்ம கோவை பொண்ணு தான் யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வில் ஸ்டேட் ஃபஸ்ட்

published 2 years ago

நம்ம கோவை பொண்ணு தான் யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வில் ஸ்டேட் ஃபஸ்ட்

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்:  https://chat.whatsapp.com/LJbd9JNXLHQL1siiXxBROA

கோவை: யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 42வது ரேங்க் பெற்ற கோவையைச் சேர்ந்த டி. சுவாதி ஸ்ரீ, தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இதன் முடிவுகள் திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டன. சுவாதி ஸ்ரீ தனது மூன்று முயற்சிகளில் இரண்டாவது முறையாகத் இத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

முதல் முயற்சியில் மெயின் தேர்வில் தேர்ச்சி பெறாத நிலையில், இரண்டாவது முயற்சியில் 126வது ரேங்க் பெற்றார். அப்போது அவருக்கு ஐஆர்எஸ் பதவி ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது மூன்றாவது முயற்சியில் அவர் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

ஊட்டியைச் சேர்ந்த இவரது குடும்பம் கோவை துடியலூர் அருகே உள்ள தொப்பம்பட்டி பிரிவில் வசித்து வருகிறது. ஸ்வாதி ஸ்ரீ ஊட்டி மற்றும் குன்னூரில் பள்ளிப்படிப்பை முடித்தார். அவர் தஞ்சாவூரில் உள்ள ஆர்.வி.எஸ் வேளாண்மைக் கல்லூரியில் பி.எஸ்.சி விவசாயப்  பட்டப்படிப்பை படித்தார். கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு முழு அளவில் தயாராகத் தொடங்கினார்.

இவரது தாயார் லட்சுமி. பி.காம் பட்டதாரியான இவர் ஊட்டி மற்றும் குன்னூரில் பணியாற்றி ஓய்வு பெற்ற தபால் உதவியாளர் ஆவார். இவரது தந்தை தியாகராஜன். தொழிலதிபர். சுவாதியின் குடும்பம் நடுத்தர குடும்பம். இவரது ஒரே சகோதரி இந்திரா உணவு தொழில்நுட்பத்தில் பி டெக் படித்து வருகிறார்.

இதுகுறித்து சுவாதியின் பெற்றோர் கூறுகையில், 
"பட்டப்படிப்பு படிக்கும் போது யு.பி.எஸ்.சி தேர்வுக்கு தயாராக வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு வந்தது. விவசாய ஆராய்ச்சியில் ஆர்வம் இருந்ததால் விவசாயத்தைத் தேர்ந்தெடுத்தார் சுவாதி. விவசாயப் பணிகளை தன் தாத்தா, பாட்டியின் ஈடுபாட்டால் நெருக்கமாகப் பார்த்த அவர், அதில் ஆராய்ச்சி செய்ய விரும்பினார். பட்டப்படிப்பு படிக்கும் போது ​​ஐஏஎஸ் அதிகாரியானால் பெரிய தாக்கத்தை உருவாக்க முடியும் என்பதை உணர்ந்தார்.
இறுதியாண்டு படிக்கும் போதே யுபிஎஸ்சி பற்றி தெரிந்துகொள்ள ஆரம்பித்தார். நேரத்தை வீணடிக்காமல் பட்டப்படிப்பு முடிந்து சென்னைக்குக் குடிபெயர்ந்த அவர், ஆரம்பத் தயாரிப்புக்காக மனிதநேயம் ஐஏஎஸ் அகாடமியில் தன்னைச் சேர்த்துக்கொண்டார். பின்னர் அறம் ஐஏஎஸ் அகாடமியில் சேர்ந்தார். ஒவ்வொரு நாளும் ஒரு பாடத்தை இலக்காக நிர்ணயித்து அதை முடிக்கக் கடினமாக உழைத்தார்." என்றனர்.

இதுகுறித்து சுவாதி கூறுகையில் "மே 18 அன்று நடந்த நேர்காணலை முடித்த பிறகு, இந்த ஆண்டு சிறந்த தரவரிசையைப் பெறுவேன் என்று நான் மிகவும் நம்பிக்கையுடன் இருந்தேன். அதனால், அடுத்த தேர்வுக்கு நான் தயாராகவில்லை.  நான் அடிப்படை புத்தகங்களை படிப்பதில் தொடங்கினேன். தொடர்ந்து முந்தய ஆண்டிற்கான கேள்வி தாள்கள் கொண்டு பயிற்சி மேற்கொண்டேன்.

நடப்புச் செய்திகளைப் புதுப்பித்துக் கொள்ள நாளிதழ்களைப் படிப்பேன். நான் அடிக்கடி கேள்விகளுக்கு விடைகண்டு மற்றும் தவறுகளை அடையாளம் கண்டு அதை திருத்திக்கொள்ளும் பயிற்சியையும் செய்தேன்.
மதியம் 1.30 மணியளவில் வீட்டிலிருந்தபோது சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் குறித்து  தெரியவந்தது. இந்தச் செய்தியைக் கேட்டு குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர். "என்றார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe