உயர் ரக போதைப்பொருளுடன் எஸ்கேப்.. கல்லூரி மாணவர்களை  மடக்கி பிடித்த கோவை போலீஸார்

published 1 year ago

உயர் ரக போதைப்பொருளுடன் எஸ்கேப்.. கல்லூரி மாணவர்களை  மடக்கி பிடித்த கோவை போலீஸார்

கோவை: கோவையில் கேரளா மாநில வாளையார் எல்லைப்பகுதிக்கு மிகவும் அருகில் அமைந்துள்ள கே.ஜி.சாவடி  பகுதியில்  உயர்ரக போதை பொருள் விற்பனைக்கு வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் தனிப்படை போலீஸார் நேற்று மாலை அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது பாலக்காடு ரோடு கவுண்டர் மெஸ் அருகே  சோதனை மேற்கொண்ட போது உயர் ரக போதை பொருளான மெத்தபெட்டமைனை வைத்திருந்த கேரளா மாநிலத்தை சேர்ந்த அபிநந்த் (21) மற்றும் முகமது பைசல் (19) ஆகியோர் போலீஸாரை கண்டதும் கேரளாவுக்கு தப்பிக்க முயன்றனர். 

தனிப்படை போலீஸார் அவர்களை எல்லைப்பகுதிக்கு முன்பாகவே மடக்கி பிடித்து கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து ரூபாய் 16000  மதிப்புள்ள 6 கிராம் எடையுள்ள  மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், " இந்த இரண்டு இளம் வாலிபர்களும் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள். கேரளாவில் இருந்து கோவைக்கு வந்த அவ்வப்போது போதை பொருள் விற்பனை செய்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் பாலக்காடு அடுகே உள்ள கல்லூரியில் படித்து வருகின்றனர்," என்றனர்.

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe