கொடாநாடு கொலை வழக்கு விசாரணைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி

published 2 years ago

கொடாநாடு கொலை வழக்கு விசாரணைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி

கோவை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம் : https://chat.whatsapp.com/KsPYwSVgSwPDblO1iteFxE

கோவை: கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் தனக்குத் தெரிந்த விவரங்களை போலீசாரிடம் தெரிவித்துள்ளதாக விசாரணைக்குப் பின் முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு பகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கடந்த 2017ம் ஆண்டு காவலாளியை கொலை செய்துவிட்டு அங்கிருந்த பொருட்களை ஒரு கும்பல் திருடிச் சென்றது.

இது தொடர்பாக நீலகிரி மாவட்ட காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக இருந்த கனகராஜூக்கு இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

இந்நிலையில் கனகராஜ் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தார். இதனிடையே கொடநாடு வழக்கு குறித்து விசாரிக்க மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் சுதாகர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்த தனிப்படைகள் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீலகிரி மாவட்ட எஸ்பி ஆஷிஸ் ராவத் தலைமையில் தனிப்படை அதிகாரிகள் முக்கிய நபர்களை அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே ஜெயா தொலைக்காட்சியின் இயக்குநர்களில் ஒருவரான விவேக் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அழைத்து விசாரிக்கப்பட்டனர்.

இந்நிலையில்  கோவை கவுண்டம்பாளையம் தொகுதியின் முன்னாள் உறுப்பினர் ஆறுக்குட்டியிடம் கோவை பி.ஆர்.எஸ் மைதானத்தில் உள்ள அலுவலகத்தில் வைத்து போலீசார் நேற்று விசாரணை நடத்தினர்.

ஜெயலலிதாவிடம் ஓட்டுநராக பணியாற்றிய கனகராஜ், ஆறுக்குட்டியிடம் சுமார் ஒன்றரை ஆண்டுகள் ஓட்டுநராக பணிபுரிந்துள்ளார். மேலும், விபத்தில் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பாகவும் ஆறுக்குட்டியுடன் கனகராஜ் போனில் பேசி இருப்பதும் தெரிய வந்துள்ளது.

இதன் அடிப்படையிலேயே ஆறுக்குட்டியிடம் விசாரணை நடத்தப்பட்டது. காலை 11:30 மணியளவில் தொடங்கிய இந்த விசாரணையில் மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் சுதாகர் மற்றும் நீலகிரி மாவட்ட எஸ்.பி.ஆஷிஸ் ராவத் உட்பட முக்கிய காவல்துறை அதிகாரிகள் நேரடியாக விசாரணை மேற்கொண்டனர்.

சுமார் 6 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற விசாரணை  நடைபெற்றது. விசாரணை முடிந்து வெளியே வந்ததும் ஆறுக்குட்டி செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஒன்றரை ஆண்டு கனகராஜ் என்னிடம் பணிபுரிந்த காரணத்தால் என்னை விசாரணைக்கு அழைத்தனர். எனக்குத் தெரிந்த உண்மைகளை கூறியுள்ளேன். மேலும் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பதாக கூறியுள்ளேன். விசாரணை சரியாக நடைபெற்றது." என்றார்.


 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe