மூன்று மாதத்தில் கோவை விமானநிலைய விரிவாக்கப் பணி தொடங்கும்: ஆட்சியர் சமீரன் தகவல்

published 2 years ago

மூன்று மாதத்தில் கோவை விமானநிலைய விரிவாக்கப் பணி தொடங்கும்: ஆட்சியர் சமீரன் தகவல்

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்:  https://chat.whatsapp.com/LJbd9JNXLHQL1siiXxBROA

கோவை: "கோவை விமான நிலையம் தற்போது 607 ஏக்கரில் அமைந்துள்ளது. இங்கு விமான ஓடுதளம் 9 ஆயிரத்து 900 அடி மட்டுமே உள்ளது. இதனால் வெளிநாடுகளிலிருந்து வரும் பெரிய விமானங்கள் மற்றும் சரக்கு விமானங்கள் தரையிறங்க முடியவில்லை. எனவே விமான ஓடுதளத்தை 12 ஆயிரத்து 500 அடியாக மாற்றி அமைத்தால், பெரிய விமானங்கள் தாராளமாகத் தரையிறங்க முடியும்.
இதற்கு இன்னும் கூடுதலாக 627 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்த வேண்டியுள்ளது.

இதையடுத்து நிலம் கையகப்படுத்தும் பணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. இதில் கையகப்படுத்தப்பட உள்ள 627 ஏக்கரில் 134 ஏக்கர் நிலம் பாதுகாப்புத்துறைக்கும், 28 ஏக்கர் மானாவாரி நிலமும் அடங்கும். இந்த நிலங்கள் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்டுள்ளன. 

மீதமுள்ள நிலங்களை கையகப்படுத்த ரூ 1,132 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதையடுத்து நில உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்கப்பட்டு நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியினை 3 மாதத்திற்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

விமான நிலைய விரிவாக்கம் மிகவும் அவசியம். இதன் காரணமாக அரசு ரூ.1,132 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியிலிருந்து நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சில நேரங்களில் சார்பதிவாளர் அலுவலகத்தில் முன்பதிவு செய்யப்பட்டு பத்திரப்பதிவு நடைபெற்று வருகிறது. இதுவரை நில உரிமையாளர்களுக்கு ரூ.800 கோடி வரை நிதி வழங்கப்பட்டு 70 சதவீத நிலங்கள் வரை கையகப்படுத்தப்பட்டுள்ளன. மீதம் உள்ள நிலங்களை இன்னும் 3 மாதத்திற்குள் முடிக்கத் திட்டமிட்டு உள்ளோம்.

நிலம் கையகப்படுத்தும் பணி நிறைவு பெற்றதும், மத்திய விமான ஆணையத்திடம் நிலம் ஒப்படைக்கப்பட்டு, விமான நிலைய விரிவாக்கப் பணி விரைவில் தொடங்கப்படும். இதன்பின்னர் கார்கோ விமானம் உள்பட அனைத்து பெரிய விமானங்களும் கோவையில் தரையிறங்க வசதியாகத் தேவையான ஓடுதளம் அமைக்கப்படும். மேலும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து கோவைக்கு நேரடி விமானச் சேவை தொடங்க மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்." இவ்வாறு அவர் கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe