மேட்டுப்பாளையம் -கோத்தகிரி சாலையில் தடுப்புச்சுவரில் மோதி வேன் சாய்ந்து விபத்து

published 2 years ago

மேட்டுப்பாளையம் -கோத்தகிரி சாலையில் தடுப்புச்சுவரில் மோதி வேன் சாய்ந்து விபத்து

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்:  https://chat.whatsapp.com/LJbd9JNXLHQL1siiXxBROA

கோவை: மேட்டுப்பாளையம் -கோத்தகிரி சாலையில் தடுப்புச்சுவரில் மோதி வேன் சாய்ந்து விபத்துக்குள்ளானது. மரத்தில் சிக்கி நின்றதால் 17 சுற்றுலாப் பயணிகள் உயிர் தப்பினர்.
சென்னை அம்பத்தூர் அய்யப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சம்பத்குமார் (வயது 58). இவர் தனது உறவினர்கள் 17 பேருடன் கடந்த 27-ம் தேதி ஊட்டிக்கு வேனில் சுற்றுலா வந்தார். டிரைவர் வெள்ளைச் சாமி என்பவர் வேனை ஓட்டினார். அவர்கள், ஊட்டியில் 2 நாட்களாகத் தங்கி சுற்றுலா தளங்களைக் கண்டு ரசித்தனர்.

நேற்று முன்தினம் ஊட்டியிலிருந்து கோத்தகிரி வழியாக ஊருக்குப் புறப்பட்டனர். அப்போது மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் 2-வது கொண்டை ஊசி வளைவு அருகே வேனில் வந்து கொண்டிருந்த பொழுது வேன் திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்திலிருந்த தடுப்புச் சுவரில் மோதியது. இதில் வேன் சுவரை இடித்துக்கொண்டு மலைப்பாதையில் சாய்ந்தது. இதனால் வேனிற்குள் இருந்தவர்கள் கூச்சல் போட்டனர்.

அங்கிருந்த மரத்தின் மீது மோதி சிக்கியதால் வேன் சாய்ந்தபடி நின்றது. இது குறித்த தகவலின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் விரைந்து வந்து, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வேனில் சிக்கித் தவித்தவர்களை மீட்டனர்.

படுகாயம் அடைந்தவர்களை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். இந்த விபத்தில் சம்பத்குமார் (52), சங்கீதா (32), முகேஷ் (21) உள்ளிட்டோருக்கு காயம் ஏற்பட்டடது. இதில் சம்பத்குமார் மேல் சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

ரோட்டோரத்தில் இருந்த தடுப்புச்சுவரை உடைத்துக் கொண்டு சென்ற வேன் மரத்தில் மோதி நின்றதால் சுற்றுலா பயணிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். 

மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் கடந்த சில நாட்களாக அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே வாகன ஓட்டுனர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe