கோவையில் மஞ்சப் பை வழங்கும் தானியங்கி இயந்திரம்.. ஆட்சியர் துவங்கி வைத்தார்!..

published 1 year ago

கோவையில் மஞ்சப் பை வழங்கும் தானியங்கி இயந்திரம்.. ஆட்சியர் துவங்கி வைத்தார்!..

கோவை: மீண்டும் மஞ்சப்பை திட்டத்தின் கீழ் மஞ்சப் பை வழங்கும் தானியங்கி இயந்திரம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி துவக்கி வைத்தார்.

 தமிழகத்தில் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாகத் துணிப்பைகளை உபயோகிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக மீண்டும் மஞ்சப் பை என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் துவக்கி வைத்தார்.

 தொடர்ந்து மாவட்டந்தோறும் மஞ்சப்பைகள் விநியோகம் செய்யப்பட்டு அதனை உபயோகிப்பதற்கான பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாகக் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது.

 இந்த இயந்திரத்தை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி துவக்கி வைத்தார். இது தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக கோவையில்  வைக்கப்பட்டுள்ள முதல் தானியங்கி இயந்திரமாகும். இதனைத் தொடர்ந்து ஆர்.எஸ்.புரம் மாற்றும் சிங்காநல்லூர் பகுதிகளில்  உள்ள உழவர் சந்தைகள் உட்பட 5 இடங்களில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் இந்த தானியங்கி இயந்திரங்கள் வைக்கப்பட உள்ளன.

 இது தவிர கோவை மாநகராட்சிக்கு 5 இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த 5 இயந்திரங்களைப் பேருந்து  நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வைக்க மாநகராட்சி  நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

 இந்த இயந்திரத்திற்குள் 10 ரூபாய் நாணயத்தைச் செலுத்தினால் இயந்திரத்தில் ஒரு மஞ்சப்பை-யை வழங்குகிறது. இது தவிர 10 ரூபாய் நோட்டுக்களையும் செலுத்தி பைகளை பெற முடியும். மேலும் 20 ரூபாய், 50 ரூபாய் மாற்றும் 100 ரூபாய் நோட்டுக்களைச் செலுத்தி தேவைக்கு ஏற்ப பைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும், க்யூ ஆர்க் கோடு மூலம் பணம் செலுத்தும் வசதியும் உள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe