கோவையில் இனி பேருந்தில் டிக்கெட் வாங்குவது ரொம்ப ஈசி..

published 1 year ago

கோவையில் இனி பேருந்தில் டிக்கெட் வாங்குவது ரொம்ப ஈசி..

தமிழகத்திலேயே முதன் முறையாக கோவையில் தனியார் பேருந்துகளில் QR கோடு மூலமாக பணம் செலுத்தி பயணச்சீட்டு பெறும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புதுப் புது ஐடியாக்களை உலகிற்கு அறிமுகம் செய்து அசத்துபவர்கள் கோவை வாசிகள். ஜி.டி நாயுடு காலம், அதற்கு முன்பு இருந்தே கோவை மக்கள் ஸ்மார்ட்-ஆனவர்கள் தான். அந்த வகையில் டிஜிட்டல் பேமெண்ட் முறையை பேருந்துகளிலும் அறிமுகம் செய்துள்ளனர்.

 கோவையில் ஒண்டிப்புதூர் பகுதியில் இருந்து வடவள்ளி நோக்கி செல்லும் ஜெய்சக்தி என்ற பேருந்தின் உட்பகுதியில் QR கோடு ஒட்டப்பட்டுள்ளன. இந்த QR கோடை ஸ்கேன் செய்வதன் மூலமாக நாம் பேருந்து பயணத்திற்கான பயணச்சீட்டு பெற்றுக் கொள்ள முடியும்.

சில்லறை தட்டுப்பாட்டை குறைக்க QR கோடு ஒட்டப்பட்டுள்ளதாக பேருந்தின் நடத்துநர் தீபக்குமார் தெரிவிக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், “சில்லறை தட்டுப்பாடு அதிகரித்திருப்பதாக பேருந்தின் உரிமையாளரிடம் கூறினோம். இதனால் அவர் QR கோடு முறையை எங்கள் பேருந்தில் கொண்டு வந்தார். பயணி ஒருவர் QR கோடு ஸ்கேன் செய்து பணம் செலுத்தியவுடன் அதனை எங்களுக்கு தெரிவிக்கும் படி எங்களது செல்போனில் செயலி ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது. எங்கள் நிறுவனத்தின் கீழ் இயங்கும் 5 பேருந்துகளில் இந்த முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.” என்றார்.

பேருந்தில் டிக்கெட் வாங்குவதற்கு டிஜிட்டல் பேமெண்ட்ஸ் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது கோவை மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe