ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்-19வது பட்டமளிப்பு விழா

published 1 year ago

ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்-19வது பட்டமளிப்பு விழா

கோவை: கோவை, குனியமுத்தூர் பகுதியில் உள்ள, ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இன்று, 19வது பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில், 2,498 பட்டதாரிகளுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டது.

கோவை, குனியமுத்தூர் பகுதியில், உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இன்று, 19வது பட்டமளிப்பு விழா, இக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது, இந்த பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில், அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் உள்ள கன்சாஸ் சிட்டி அவிலா பல்கலைக்கழகத்தின் தலைவர் டாக்டர் ஜேம்ஸ் சி பர்க்கி சிறப்பு விருந்தினராகக்  கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு, பட்டங்களை  வழங்கினார்.

இதில்  2,161 இளங்கலை  மற்றும் 337 முதுகலை பட்டதாரிகள் உட்பட 2,498 பட்டதாரிகளுக்குப் பட்ட படிப்புக்கான சான்றிதழ்கள் இந்த விழாவின் வாயிலாக, வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் 77 தரவரிசைப் பெற்றவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.


இதில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர் மாணவர்கள் மத்தியில் கூறும் பொழுது, பட்டதாரிகள் இந்திய நாட்டின் கலாச்சாரத்தை நன்கு தெரிந்து அதை தங்களின் வாழ்க்கை மேம்படப் பயன்படுத்துங்கள்.

இந்திய வளர்ச்சியின் வரலாற்றை நன்கு தெரிந்துகொண்டு நாடு முன்னேற உங்கள் கடமையை ஆற்றுங்கள். இந்தியா உலகில் கலாச்சாரத்திற்கு முதன்மை நாடாக உள்ளது. அமெரிக்காவில் மட்டும் இன்றி உலக நாடுகளில் இந்தியர்களின் கலாச்சாரம் மிகவும் போற்றப்பட்டு வருகிறது. 

அதேபோல் இந்தியர்கள் உலக நாடுகளில் பல்வேறு அரிய சாதனைகளைப் படைத்து வருவதுடன், உலகின் பல்வேறு நிறுவனங்களைத் தலைமையேற்று வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர். மேலும் உலக அளவில் பல்வேறு நிறுவனங்கள் இந்தியர்களுக்கு நல்ல வாய்ப்பை கொடுத்து வருகின்றனர். வாழ்க்கையில் முன்னேற உத்வேகத்துடன் செயல்படுங்கள். நமக்கு உதவியவர்களுக்கு நன்றி கூறுங்கள். 

நாம் முன்னேறி, வீடு மற்றும் நாடு வளர்ச்சி அடைய உங்களின் படிப்பினை பயன்படுத்துங்கள். உங்கள் படிப்பின் மூலம் பிறர் வளர்ச்சி அடைய உதவுங்கள். நீங்கள் படித்த கல்லூரியின் தற்போதைய மாணவர்கள் வளர்ச்சி அடைய வழி சொல்லுங்கள் எனக் கூறினார். இந்த பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில், ஸ்ரீ கிருஷ்ணா கல்வி  நிறுவனங்களின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் எஸ்.மலர்விழி, அறங்காவலர் கே.ஆதித்யா, கலந்து கொண்டு அனைவருக்கும் வாழ்த்துக்களைத்  தெரிவித்தனர்.

 மேலும், இந்த நிகழ்ச்சியில், ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் முதன்மை  நிர்வாக அதிகாரி  முனைவர் கே.சுந்தரராமன், கல்லூரியின் முதல்வர் முனைவர் ஆர்.ஜெகஜீவன், கல்லூரி துணை முதல்வர் முனைவர் ஆர்.விஜயசாமுண்டீஸ்வரி, தேர்வுக் கட்டுப்பாட்டாளர் முனைவர் பி.மீனா ப்ரீத்தி, பட்டதாரிகள், பெற்றோர்கள், பேராசிரியர்கள் உட்படப் பலர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கத

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe