கோவையில் 158 பேருக்குப் பணப் பலன்களை வழங்கிய அமைச்சர்கள்

published 1 year ago

கோவையில் 158 பேருக்குப் பணப் பலன்களை வழங்கிய அமைச்சர்கள்

கோவை: கோவையில் போக்குவரத்துத் துறையின் சார்பில் 158 பணியாளர்களுக்கு பணப்பலன்களை அமைச்சர்கள் வழங்கினர்.

கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா கோவில் பகுதியில் உள்ள தமிழ்நாடு போக்குவரத்துக் கழக கோவை கிளை பணிமனையில் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், மற்றும் மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் கோவையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற 353 பணியாளர்கள், விருப்பார்ந்த பணி ஓய்வு பெற்ற 68 பணியாளர்கள், இயற்கை எய்திய 53 பணியாளர்களின் வாரிசுதாரர்கள் என மொத்தம் 518 பணியாளர்களுக்கு 145.58 கோடி பணப்பலன்களை வழங்கினர். 

அதனைத் தொடர்ந்து கோவை மாநகரில் இயங்கும் பேருந்துகளில் முதல் கட்டமாக 65 பேருந்துகளுக்கு GPS மூலம் பேருந்து நிறுத்தம் ஒலி அறிவிப்பு திட்டம் துவங்கி வைக்கப்பட்டது.

 மேலும் கோவை மண்டலத்தில் 3 பணிமனைகள் ஈரோடு மண்டலத்தில் மூன்று பணிமனைகள் மற்றும் திருப்பூர் மண்டலத்தில் ஒரு பணிமனை என 7 பணிமனைகளில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்குக் குளிர்சாதன வசதியுடன் கூடிய ஓய்வுகளைத் துவக்கி வைக்கப்பட்டு அனைத்து ஓட்டுநர்களுக்கும் ஓட்டுநர் கையேடு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், துணை மேயர் வெற்றிச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe