கோவையில் கார் ஓட்டுநர்கள் குடும்பத்துடன் பங்கேற்கும் ரேஞ்ச் ஒடிசி..!

published 1 year ago

கோவையில் கார் ஓட்டுநர்கள் குடும்பத்துடன் பங்கேற்கும் ரேஞ்ச் ஒடிசி..!

கார் ஓட்டுநர்கள் குடும்பத்துடன் பங்கேற்கும் ஜேகே டயர் நிறுவனம் நடத்தும் ரேஞ்ச் ஒடிசி பேரணியை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் துவக்கி வைத்தனர்.

பிரபல டயர் உற்பத்தி நிறுவனமான ஜேகே டயர் பல்வேறு கார்பந்தய நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. ஆண்டுதோறும் இந்நிறுவனம் நடத்தும் நிகழ்ச்சிகளில் உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான வீரர்கள் கலந்து கொள்வர்.

இந்நிலையில் புதிய சாகச மனப்பான்மையை விரும்பும் ஓட்டுநர்களுக்காகவும் அவர்களது குடும்பத்தினரை மகிழ்விக்கும் வகையிலும் குடும்பத்துடன் பங்கேற்கும் ரேஞ்ச் ஒடிசி எனும் கார் பேரணியை நடத்துகிறது.

இந்நிகழ்ச்சி முதல் முறையாக கோவையில் துவங்கியது. ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்ற இந்தப் கார் பேரணியை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.

இந்தப் பேரணியில் நேரம் வேகம் மற்றும் தூரம் ஆகியவை கணக்கிடப்படும். மேலும் இந்த போட்டியில் சரியான வேகம் மற்றும் நிறத்தை ஓட்டுநர்கள் மற்றும் வழிகாட்டிகள் பின்பற்றுகிறார்கள் என்பதும் சோதிக்கப்படுகிறது.

இந்த பேரணி இனி வரும் நாட்களில் புனே, ஐதராபாத், கொச்சின், சண்டிகர், குர்கான் ஆகிய இடங்களிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் ஜேகே டயர் நிறுவனத்தின் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe